பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : செவ்வேள் வாழ்த்து (21) 199 பூவின் செந்நிறத்தைக் கொண்ட துவர்நீர் துவர் - துவர்ப்பு அது' கலந்த நீர். வெரிந் முதுகு வரி - கோடு, வள்பு - பிளப்பு பீலி - மயிற்றோகை புரி விரும்பத்தக்க - - - வேலினை உடையோய் கையதை, - கொள்ளாத் தெவ்வர்கொள் மாமுதல் தடிந்து - புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்தவேல்; நின் பெரிதான தலைமைப்பாட்டை அசுரர்கள் ஏற்றுக் கொள்ளாராயினர். அவர்களின் கோமானாகிய சூரபதுமன் நினக்கஞ்சி முடிவிலே மாமரத்தின் வடிவைக் கொண்டு, கடலி டையே ஒளிந்து கொண்டான். அம் மாமரத்தை வேரோடும் வெட்டி வீழ்த்தியது நின் வேல். கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயரோடு விளங்கிய கிரவுஞ்சக் குன்றத்தின் செருக்கடங் குமாறு, அதனையுடைத்து வழி திறந்ததும் நின் வேலேயாகும். அத்தகைய வெற்றிவேலினை ஏந்தியவனே சொற்பொருள் : கொள்ள தலைமையை ஏற்றுக் கொள்ளாத தெவ்வர் - அசுரர். மா - மாமரம். புள் - கிரவுஞ்சப்புள். பொருப்பு - மலை. புடை பக்கம். திறந்த உடைத்து வழி யமைத்த. - கடப்பந் தாரினாய்! பூண்டதை - சுருளுடை வள்ளி இடையிடுபு இழைத்த உருளினர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ்தார்; - சுருள்தலையுடைய வள்ளிப் பூவினை இடையிடையே தொடுத்துக் கட்டப்பெற்ற, உருட்சியுடைய கடப்பம்பூக் கொத்துக் களாலான மாலையினை மார்பிடத்தே அணிந்தவனாக, அவ்விரண்டு பூக்களின் மணமும் ஒருசேரக் கமழ விளங்கும் பெருமானே! .. - - சொற்பொருள் : சுருளுடை வள்ளி - சுருண்டு சுருண்டு விளக்குந் தன்மையினையுடைய வள்ளிப்பூ உருளினர்க் கட்ம்பு - உருள் உருளாகவும், கொத்துக் கொத்தாகவும் விளங்கும் கடப்பம்பூ - வெற்றிக் கொடியோய் அமர்ந்ததை, . புரையோர் நாவின் புகழ்நலம் முற்றி - நிரையேழ் அடுக்கிய நீளிலைப் பாலை