பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO - பரிபாடல் மூலமும் உரையும் அரைவரை மேகலை அணிநீர்ச் சூழித் தரைவிசும் புகந்த த்ண்பரங் குன்றம்; 15 குன்றத் தடியுறை இயைகெனப் பரவுதும் - வென்றிக் கொடியணி செல்வ! நின் தொழுது: துரயோரான சான்றோர்கள் தம் நாவாரம் போற்று தலினாலே, புகழின் சிறப்பெல்லாம் பெற்று விளங்குவது திருப்பரங்குன்றம். வரிசையாக ஏழுபகுதிகள் அடுக்கியது போல விளங்கும் நெடிய இலைகளைக் கொண்ட ஏழிலைப் பாலை மரங்கள் எங்கணும் நிறைந்து, குன்றத்தின் இடையிலனிந்துள்ள தழையுடையைப்போல விளங்கும். அரைப் பகுதியிலே இட்டுக் கொள்ளும் மேகலாபரணமாக அழகிய நீர் நிலைகளும் அருவி களும் எம்மருங்கும் சூழ்ந்திருக்கும். விசும்பிடத்துத் தேவர்களும் தரையிடத்தை விரும்பிவந்து போற்றம் தகுதியோடு, அவ்வாறு இயற்கையெழில் பொருந்த விளங்குவது, தண்மையுடைய திருப்பரங்குன்றம் அக் குன்றத்து அமர்ந்திருத்தலை விரும்பிவந்து தங்கியிருக்கும் பெருமானே! வெற்றிக்கொடியான கோழிச்சேவற் கொடி அழகுசெய்தபடி விளங்க எழுந்தருளும் செல்வனே! நின்னைத் தொழுது, நின் குன்றத்தே வந்து, நின் அடியவராகும் பேறு எமக்கும் பொருந்துகவென்று, நின்னைத் தொழுது போற்றுவோம்! எமக்கும் அருளிச் செய்வாயாக, பெருமானே! சொற்பொருள் : புரையோர் - தூயவரான சான்றோர். அணிநீர் - அழகு செய்யும் நீர்நிலைகள்; இவை அருவிகளும், சிற்றாறுகளும், சுனைகளும் ஆம் தசை விசும்புகந்த தரைக்கும் வானுக்குமாக உயர்ந்த என்பதும் ஆம். வென்றிக் கொடி-வெற்றிக் கொடி - . - . - - அழகிய ஓவியங்களோ! சுடு பொன் ஞெகிழத்து முத்தரி சென்றார்ப்பத் துடியின் அடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி அடுநறா மகிழ்தட்பு ஆடுவாள் தகைமையின் 20 நுனையிலங்கு எஃகெனச் சிவந்த நோக்கமொடு துணையணை கேன்வனைத் துனிப்பவள் நிலையும்; நிழல்காண் மண்டிலம் நோக்கி அழல்புனை அவிரிழை திருத்துவாள் குறிப்பும்: ' பொதிர்த்த முறையிடைப் பூசிய சந்தனம் 25 உதிர்த்துப் பின்னுற ஊட்டுவாள் விருப்பும்; பல்லூழ் இவையிவை நினைப்பின், வல்லோன் ஒவத் தெழுதொழில் போலும் மாதடிந் திட்டோய் நின் குன்றின் மிசை,