பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் செவ்வேள் வாழ்த்து 21 201 அடப்பெற்ற கள்ளினை உண்பதனால் ஏற்படுகின்ற களி மயக்கம் கண்டார்க்கெல்லாம் உண்டாகுமாறு, அழகமைந்த ஆடன்மகள் ஒருத்தி, நின் சன்னிதியிலே ஆடிக்கொண்டிருந் தாள். சுட்ட பசும்பொன்னாற் செய்யப்பெற்ற அவளது காற் சிலம்புகளின் உள்ளிடு பரல்களாகிய முத்தக்களின் ஆரவார ஒலி எங்கணும் சென்று பரவியது. துடியினின்று எழுந்த தாளத்திற்குப் பொருந்த, அவள் அடிபெயர்த்து வைத்தும், தோள்களை அசைத்துத் தூக்கியும், அபிநயங்களைக் காடடியபடி ஆடினாள். அவளுடைய ஆடற்கவர்ச்சியிலே ஒருவன் தன் நோக்கைச் செலுத்தினான். தன்னை அணைத்தபடி நின்ற தன் துணைவ ன்ாகிய கணவனின் அந்தப் பார்வையைக் கண்டு, அவனைச் சினந்துகொண்டாள் அவன் காதலி. அவளுடைய அந்தச் சினத்தின் தன்மையும் தன் காதலனும் அவனைப்போல ம்யங்கிவிடக் கூடாதே என்று எண்ணினாள் மற்றொருத்தி, அதனால், தன் நிழலைக் காணுகின்ற கண்ணாடியிலே தன்னைப் பார்த்தவளாகச், செந் நெருப்பைப் போல ஒளிசெய்யுமாறு செம்பொன்னாலே செய்யப் பெற்ற, ஒறிவீசும் தன் அணிகளை அழகுறத் திருத்தி அமைத்துக் கொண்டாள். அவள் மனக்குறிப்பிலே தோன்றிய கலவரமும் - - மற்றொருத்திக்கும் அதே கவ்லை உண்டாயிற்று. பூரித்த தன் மார்பகங்களிடையே பூசியிருந்த சந்தனச்சாந்து காய்ந்து பொரிப்பொரி யாகியிருந்த நிலைமையைக் கண்டாள். அதனை உதிர்த்துவிட்டுப் புதிய சாந்தினை அவள்தன் மார்பிடத்தே ஊட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்திலே அவ் வேளையிலே நிலவிய விருப்பமும் - - ஆகிய இக் காட்சி நயங்களையெல்லாம் பன்முறை கண்டு, மற்றும் இவை. போல்வனவாய பல காட்சிகளையும் கண்டு, அவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால், அவை எல்லாம் ஒவியத்தொழிலிலே வல்லானாகிய ஒருவன், ஒவியங்களாக எழுதியமைத்த அழகினைப்போல விளங்கியிருக்குமே! சூரனாகிய மாமரத்தை வெட்டியழித்த வெற்றிவேலனே! நின் குன்றின் மேலாக இத்தகைய இன்பக்காட்சிகள் பலவாகுமே! - சொற்பொருள் : சுடுபொன் ஞெகிழம் சுடப் பெற்ற பொன்னாலாகிய சிலம்பு முத்தரி - முத்துப் பரல்கள். அடுநறா அடப்பெற்ற கள்.மகிழ்தட்ப ஆடுவாள்-மகிழ்ச்சி தன்னை மயக்க அதனாற் களிகொண்டு ஆடுவாளும் ஆம் துணயணை கேள்வன் - அணைத்தபடி நிற்கும் துணைவனாகிய கணவன். துனிப்பவள் - சினங் கொள்பவள். நிழல் காண் மண்டிலம் - கண்ணாடி பொதிர்த்த பூரித்த பல்லூழ். பன்முறை. ஒவம் ஒவியம்.