பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பரிபாடல் மூலமும் உரையும் விளக்கம் : தத்தம் காதலரது மனம் தமக்குமட்டுமே உரியதென்ற உறுதியுடன், அது நெகிழ்ந்து புறம்போகும்போது, அதனைத் தம்மால் இழுக்கப் பெண்டிர் முந்துவர் இந்த அரிய கற்புத்திண்மையினை இப்பகுதி மிகவும் நயமாகக் கூறுகின்றது. - எல்லாம் ஒலி முழக்கம் மிசைபடு சாந்தாற்றி போல எழிலி இசைபடு பக்கம் இருபாலும் கோலி விடுபொறி மஞ்ஞை பெயர்புடன் ஆட விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப் r 35 பாணி முழவிசை அருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் இரங்கு முரசினான் குன்று; - - - மகளிர்தம் மார்பகத்தே பூசுகின்ற சாந்தினது ஈரம் புலரு வதற்காக ஆற்றுகின்ற சாந்தாற்றி என்னும் ஆலவட்டத்தைப் போல, மேகங்கள், புகழப்படும் திருப்பரங்குன்றத்தின் இருபக்கங் களிலும் திரண்டு இடிமுழக்கைச் செய்து கொண்டிருந்தன. அக் காட்சியைக் கண்டதும், ஒளிசெய்யும் புள்ளிகளைக் கொண்ட வானமயிலினங்கள் கால்பெயர்த்து ஆடத் தொடங்கின. விரலாற் செறித்தும் திறந்தும் துளைகளின் வழியாக இசைக்கும் மூங்கிற்குழலின் இசையைப்போல ஒலிமுரலும் தும்பியினங்கள் பலவும், இதழவிழ்ந்த மலர்களிடத்தே மொய்த்து ஊதியவையாய், ஒலி செய்து கொண்டிருந்தன. புதிதாக வந்த வண்டினங்கள் யாழிசையைப் போன்ற ஒலியோடு ஆரவாரித்துக் கொண்டி ருந்தன. தாளத் தோடுங் கூடிய முழவின் ஒலியைப்போல, அருவி நீரானது முழக்கத்தோடு வீழ்ந்துகொள்டிருந்தது. இவ்வாறு எல்லா ஒலிகளும் ஒழுங்கே எழுந்து, அவை எல்லாம் கலந்து ஒலிக்க விளங்குவது, வெற்றி முரசொலி எழுந்து கொண்டிருக்கும் குமரப்பெருமானாகிய நினக்குரிய திருப்பரங்குன்றம் ஆகும். சொற்பொருள் : மிசை படு மேலாகப் பூசப்படும்; மேலே தூக்கி விசிறப்படும். சாந்தாற்றி - விசிறி போல்வது சாந்தை ஈரம் புலர்த்த விசிறப் பயன்படும் விசிறி. இசை - ஒலி. கோலி - பரந்து. பெயர்பு - கால்பெயர்த்து, தூம்பு துளை. யாணர் வண்டினம் - குன்றுக்குப் புதிதாக வந்த வண்டினம். பரணி - தாளம். விளக்கம் : இயற்கையே அங்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது என்பது இது.