பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| جہم | - uါgfဇံဖိဒါဧ၏။ *திருமால் வாழ்த்து (1) - - 13 ஆற்றல்மிகுந்ததுய சிறப்பை உடையவர்கள் அந்தணர்கள். அவர்கள் பேணிக் காக்கின்ற அறவொழுக்கமும் நீயே! நின்பால் அன்பு உடையோருக்கு, அவர்க்கருளும் அருளாக அமைந்து நின்று உதவுபவனும் நீயே! - திறனற்றோரைத் திருத்திய, குற்றத்தின் நீங்கிய சிறப்பினை யுடைய மறமாண்பு என்பதும் நீயே நின்னைப் பகைத்தோர்க்கு காட்சியளவாலேயே அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீயே! அழகிய இடத்தை உடையது வானம்; அதனிடத்தே அழகான நிலவொளியைப் பரப்பியதாக விளங்கி வருகின்ற திங்களும் நீயே! அனைத்தையும் எரித்துப் பொசுக்கவல்ல சுடுகதிர்களையுடைய கதிரவனும் நீயே! - ஐந்து தலைகளை உயர்த்துள்ள நாகம் கவிந்து நிழல்செய்ய விளங்கும், அச்சத்தைப் பகைவர்க்குத் தருதலையுடைய அரிய ஆற்றலைக் கொண்ட பெருவலி உடையோனாகிய ஒப்பற்றவனும் நீயே அனைத்தையும் அழிக்கும் ஊழிக்காலக் கூற்றமும் நீயே நலம் எனக் கூறப்படுவன அனைத்தும் ஒருங்கே பொருந்திய, குற்றமற்ற தெளிந்த அறிவைத் தருகின்ற வேதமும், வெள்ளைத் தாமரைப் பூவின் மேலோனாகிய நான்முகனும், அவனிடத்தாகப் பிறக்கின்ற படைப்பு’ என்னும் தோற்றமும் நீயே! உலகிற்கு வெற்றியுண்டாக எழுகின்ற மேகமும், அம்மேகம் பரந்து திரிகின்ற இடமான அகன்ற விசும்பும், அதன் பயனைப் பெறுவதான இப்பூவுலகமும், இதன்கண் நெடிது உயர்ந்து விளங்கும் இமயமாகிய பெருமலையும், அனைத்தும் நீயே யாவாய்! - - - - சொற்பொருள்: விறல் - வெற்றி மேம்பாடு விழுச்சீர் - மிக்க சிறப்பு. அந்த்ணர் - அருளாளர். அறன் - ஒழுக்கம்; நன்மை தீமை களைப் பகுத்து ஆய்ந்து, தீமைகளை அறுத்து நன்மைகளை மட்டுமே செய்தொழுகும் ஒழுக்கமாதலின், 'அறன் ஆயிற்று: இதனைப் பேணுவோரே அந்தணாளர். மறன் - மறச் செவ்வி; மாற்றாரை எதிர்த்தழிக்கும் வலிமை, கனலி - கதிரவன் மைந்து மிக்க வலிமை. ஒருவன் - ஒப்பற்றவன். மடங்கல் - கூற்றம். நலம் - நன்மை புகர்-குற்றம்.வலன்-வெற்றி.எழிலி-மேகம்.மாக விசும்பு - அகன்ற வானம். நிலன் - நிலவுலகம். - விளக்கம் : திருமாலே படைப்பும் காப்பும் அழிவுமாகிய முத்தொழிலுக்கும் ஆதியெனவும், இவ்வுலகிலுள்ள அனைத் தையும் தோற்றுவித்து இயக்கும் சக்தி அவனதே எனவும் கூறிப் போற்றுகின்றனர். - -