பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (22) 207 அவ்வாறாக எழுகின்ற இன்பத்தின் எக்களிப்பினாலே ஆடியும் பாடியும் அழகுச்ெய்தும் மிக்க மகிழ்வினை நுகர்கின்றனர்.இந்தத் காட்சிகளைக் காட்டுகின்றார் கவிஞர். பரங்குன்றப் பெருமானை அடைந்தார்க்கு இன்பநிலை தானே வந்து எய்துமென்று கூறுவார்போல, மிகச்சுவையான காட்சிகளை ஓவியப்படுத்திக் காட்டுகின்றன்ர். அவற்றை மனத்தகத்துக் கண்டு, அவற்றோடும் ஒன்றிக் கலந்து நாமும் இன்புறல் வேண்டும். இருபத்திரண்டாம் பாடல் തഖങ്ങധ (22) இப் பாடலைப் பாடியவர், இதற்கு இசை வகுத்தவர், அவர் வகுத்த இசை ஆகியன யாதும் புலப்படவில்லை. இதன் பிற்பகுதியும், இடையிடையே சிற்சில சொற்களும் தொடர்களும் சிதைந்துள்ளன. - வயல் புகுந்த வையை! ஒளிறுவாள் பொருப்பன் உடல்சமத் திறுத்த களிறுநிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர அரசுபடக் கடந்த ஆனாச்சீற் றத்தவன் முரசதிர் பவைபோல் முழங்கிடி பயிற்றி ஒடுங்கார் உடன்றவன் தானை வில்விசை 5 விடுங்கனை ஒப்பின் கதழுறை சிதறுஉக் - கண்ணொளிர் எஃகின் கடிய மின்னியவன் வண்மைபோல் வானம் பொழிந்தநீர் மண்மிசை ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன் - தானையி னுாழி.... தாவூக் கத்தின் - போன நிலமெல்லாம் போரார் வயல்புகுத ; 10 ஒளிவீசுகின்ற வெற்றிவாளை உடையவன் பாண்டியன்: அவன் பொதியமலைக்கும் உரிமை உடையவன். அவன் சினங் கொண்டு பகைவர்மெற் படையெடுத்துச் சென்று போரியற்று வான். அவனுக்குத் தோற்ற பகைவர் திறையாகத் தந்த களிறுகள் வரிசை வரிசையாக நிற்கும்; அவற்றைப்போல வானத்தே மேகங்கள் அணியணியாக நெருங்கிப் பரந்திருந்தன. பகையரசு அழிந்தொழிய அவரை வெற்றி கொண்ட பின்னரும், அடங்காச் சினத்தைக் கொண்டோனாகிய பாண்டி யனின் போர் முரசங்கள், எஞ்சிய பகையையும் ஒழிப்போம் என முழக்கமிடுவதைப் போல, அம் மேகங்கள் பெருமழை பெய்த பின்னர், மீளவும் இடிமுழக்கச் செய்தன.