பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * வையை (22) - - 211. அதற்கேற்பக் காற்றாகிய நட்டுவன், மெல்லிய பூங்கொத்துக் களையுடைய பூங்கொடிகளை அசைந்தாடுமாறு செய்தான். அவ்விடத்தே, இவ்வாறு இசை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும். தத்தமக்குத் தொழிலால் மறுப்புக் கொள்ளும் மற்றொன்றையும் கொண்டு விளங்கின. இனிய புனலையுடைய வையைக் கரையிலுள்ள திருமருத முன்துறையிடத்தே இவ்வாறு எல்லாம். பொருந்திக் காணப்பெற்றன. . . ‘. .

  • சொற்பொருள் : கணை - திரட்சி. மண் - மார்ச்சனை. கண் அடிக்குமிடம் எதிர்வ மாறுபடுவன போல. தொடை தொடர்ச்சி. புகர் - புள்ளி. வரி - கோடு. தவிர்பு அல்- ஒழியாவாய். நுடங்க அசைய. நடன் - நட்டுவன். - - -

விளக்கம்: செயற்கையால் எழுகின்ற இன்னொலிகளோடு, இயற்கையாக எழும் இன்னொலிகளும் சேரத், திருமருத முன்துறை, ஒரே இன்னிசைக் கூடமாகவே விளங்கிற்று என்க. நித்தில வரிச் சிலம்பு கோடுளர் குரற்பொலி ஒலிதுயல் இருங்கூந்தல் ............புரைதீர் நெடுமென் தோடார்பு தழைமலர் துவள வல்லியின் நீடாழ்பு தோக்கை நித்தில வரிச்சிலம்பு - இவ்வடிகள் சிதைந்துள்ளன. பின் தொடர்பும் புலனாக வில்லை. - -