பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 - - பரிபாடல் හූ ෆ්‍රො பரிபாடற்பகுதிகள் -இவை உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய மேற்கோட் செய்யுட்கள்; புறத் திரட்டு ஆகியவற்றிற் காணப் பெற்றவை - () திருமால் - அடியார்களுள் இறைவனின் திருவடிப் பேற்றை விரும்பி அவனைத் தொழுது போற்றுபவர்கள் சிறந்தவர்கள். உலக இன்பங்களையேனும், துறக்கத்துப்போகங்களையேனும் விரும்பி வழிபடுவோர்கள் சிறந்தவராகார். அவரை மயக்கத்தின்பாற் பட்டவர் என்றே கருதுவர். இந்த அரிய தத்துவப் பொருளை விளக்குவது இச் செய்யுள். - - பரிபாடலுட் பல கால்வெள்ளத்தே மறைந்தன. அவற்றுள், ! இதனைத் தொல்காப்பிய உரையாசிரியர்களான நச்சினார்க்கினி யரும் பேராசிரியரும் செய்யுளியற் சூத்திர (120) உரைக்கண் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். பாடியோர், பண் அமைத் தோர் வரலாறுகள் தெரிந்தில. எடுத்துக் காட்டிய உரையாசியர் கட்கு நாம் மிக கடமைப்பட்டுள்ளோம். - தலையுறப் பரவுதும் வானார் எழிலி மழைவளம் நந்தத் தேனார் சிமைய மலையின் இழிதந்து நான்மாடக் கூடல் எதிர் கொள்ள் ஆனா மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுது: - - (இது தரவு) வானத்தே மிகுதியாக எழுந்தன மேகத்திரள்கள்: அவை மழை வளத்தினைத் தந்தருளின. அதனாலே தேன்வளம் பெருகியதும், உயரமான உச்சிகளைக் கொண்டதுமான சைய மலையினின்றும், மழை நீராகிய புதுப்புனல் நிலப்பகுதியை நோக்கி இழிந்து வருவதாயிற்று. o: - - அங்கனமாக இழிந்துவந்த மழைநீராகிய புதுப்புனலானது வையையாற்றின் கண்ணும் பெருகி வருவதாய், நான்மாடக் கூடலின் மாந்தர் எல்லோரும் எதிர்கொள்ளுமாறு, மதுரை யையும் சேர்வதாயிற்று. மிகச் சிறந்ததான அமுதத்தைப் போலும் சிறப்புடைய இனிய நீரானது, வையை ஆற்றின் துறைகளினிட மெல்லாம் பொருந்திச் செல்வதாயிற்று. அங்ங்னம் புதுநீர்