பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

༥༠༠༥༔"ཆ་མ་ཧཨོཾཆ༠གྲོ་ * பரிபாடற் பகுதிகள் (1) 213 பொருந்திச் செல்லும் துறைகளுள் ஒனன்றிடத்தே அமைந்தது, இருந்தையூர் என்னும் திருப்பதி. அதன்கண் திருக்கோயில் கொண்டிருக்கும் செல்வனே! நின்னுடைய திருத்தமான அடிகளிடத்தே, எம் தலைகளைப் பொருந்துமாறு வைத்து, யாமும் நின்னைப் போற்றிப் பணிவோம்! சொற்பொருள் : எழிலி - மேகம். நந்த பெருக, தேன் தேனடைகளும் ஆம் சிமை மலையுச்சி இழிதந்து-இறங்கி வந்து. நான்மாடக்கூடல் - மதுரை: இங்கே மக்களைக் குறித்தது. ஆனா மருந்து - இன்றியமையாத மருந்து இஃது அமுதம் இருந்தையூர் - வையைக் கரைத் திருப்பதிகளுள் ஒன்று மதுரைப் பேரூரின் ஒரு பகுதியாகவும் கொள்ளலாம். திருந்தடி - திருத்தமான அடி திருத்தம் - எவ்வகைக் குற்றமும் அற்றநிலை; தன்னைச் சேர்ந் தாரைத் திருந்தும் சேவடியுமாம்; சேர்ந்தார் - திருந்துவர்; எனவே சேராதார் திருந்தார் என்பதும் அறியப்படும். - அறத்திற் பிரியாப் பதி ஒருசார், அனிமலர் வேங்கை, மராஅம் மகிழம் பிணிநெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி - மணிநிறங் கொண்ட மலை ; ஒருசார், தண்ணறும் தாமரைப் பூவின் இடையிடை 10 வண்ண வரியிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப, விண் வீற்றிருக்கும் கயமீன் விரிதகையின் க்ண்வீற் றிருக்கும் கயம்; - . . . . ஒருசார், சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுற்று உழவின் ஒதை பயின்றறி விழ்ந்து 15 திரிநரும், ஆர்த்து நடுநரும் ஈண்டித் திருநயத் தக்க வயல், - ஒருசர், அறத்தொடு வேதம் புணர்தம் முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் - திறத்திற் றிரிவில்லா அந்தணர் ஈண்டி 20 அறத்திற் றிரியாப் பதி, . . . . . . (இவை நான்கும் கொச்சகம்) ஒருபக்கத்தே நீலமணியின் நிறத்தைத் தானும் கொண்ட + தாக மலையானது பொலிவுடன் விளங்கிற்று. அழகிய மலர்களையுடையவான வேங்கையும், கடம்பும், மகிழமும், கட்டவிழ்ந்து விரிந்த இதழ்களைக் கொண்ட மலர்களையுடைய அசோகமும் ஆகிய மரங்கள் பலவும் செறிந்தும், மிகவுயரமாக வளர்ந்தும், அம் மலைக்கண்ளே விளங்கின. - ஒரு பக்கத்தே, பெரிய குளமொன்றும் இருந்தது. அதன் கண், தண்மையும் நறுமணமும் கொண்ட தாமரைப்பூக்கள்