பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - - _шйып-60 «psvФрф •-солиф நிரம்பி இருந்தன. அவற்றின் இடையிடையே, அழகாக இதழ் விரிந்திருக்கும் போதுகளிடத்தே வண்டினம் மொய்த்து ஆரவாரித்தபடி விளங்கின. வானத்தே விண்மீன்கள் விளங்குவது போன்று, அக்கயத்திடத்தும் எண்ணற்ற மீன்கள் நிறைந்திருந்தன. வானத்தைப் போன்று அதுவும் விரிந்து பரந்து விளங்கும் தன்மையுடையதாயிருந்தது. கண்டாரின் கண்கள் அவ்வழகிலே மயங்கி, அதனையே நிலையாக நோக்கியபடி வீற்றிருக்கும், அத்தகைய சிறப்புடையதாகவும் அது விளங்கிற்று. - புதுநீரின் வரவால் மக்கள் விழாக்கோலம் கொள்ளத் தொடங்கினார்கள். அதனாற் பலவகையான ஒலிகள் எழுந்தன. அவ்வவொலிகட்கு எதிராக, உழவரின் ஏர்மங்கல ஒலியும் எழுந்துகொண்டிருந்தது. ஆரவாரத்துடன் நட்டுக் கொண்டி ருக்கும் உழத்தியரும், அவர்தம் அழகினில் மயங்கி அறிவிழந்து, அவர் பின்னாகவே சுற்றித்திரியும் உழவருமாக, வயற்புறங்களில் உழைப்போர் நிறைந்திருந்தார்கள். இவ்வாறு, திருமகளும் விரும்பிவந்து வீற்றிருக்கத் தகுந்த செவ்வியையுடையதான வயல்கள், நீர்வளத்தோடு ஒரு பக்கத்தே விளங்கின. அறநெறியினின்றும் பிறழாத ஒழுக்கமும், சிறந்த வேதப் பயிற்சியும், பொருந்திய தவத்தின் முதிர்ச்சியும் கொண்டோராக, இவற்றால் அமைந்த வெற்றிச்சிறப்புத் தம்மிடம் நிலைத்திருக்க, விளங்கிய கேள்வித்திறத்திலே சற்றும் திரிதலற்றவரான அந்த ணர்கள், நகரின் ஒருபக்கத்தே திரண்டிருந்தார்கள். இவர்களால், அறத்தினின்றும் திரிதலற்றனரு பதியாகவும் இருந்தையூர் விளங்கிற்று. - - சொற்பொருள் : அணி மலர் - அழகிய மலர். மராஅம் - வெண்கடப்ப மரம். பிண்டி - அசோகமரம், நிவந்து - உயரமாக ஓங்கி வளர்ந்து. சேர்பு - நெருங்கி, மணி - நீலமணி. வண்ணம் - நிறம் கயம் - குளம் கண் இடமும் ஆம் சாறு - விழா. உழவின் ஒதை - உழவரின் ஏர் மங்கல ஒலி. திரு திருமகள், வளமை; செல் வம் விறற் புகழ் வெற்றிப் புகழ் வெற்றியாவது தம் ஒழுக்கத்தால் அனைவரினும் சிறந்தோங்கி விளங்கிய செவ்வி. கேள்வித்திறம் - அறநூல்களைக் கேட்டறிந்த திறம் அறம் - அறநெறி; தீயவற்றை அறுத்து விலக்கி, நல்லனவே பற்றி ஒழுகும் மரபு. - விளக்கம் : புதுநீரின் வராவால் அனைவரும் ஊக்கத்துடன் தத்தம் தொழில்களில் ஈடுபடுகின்றனர். இயற்கையும் எழிலுடன் விளங்குவதாயிற்று. வேனலின் கொடுமை மாறியது. எங்கணும் புதுமலர்ச்சி எழுந்தது. அதனை உரைப்பது இது. மலை மணி நிறங் கொண்டது. மழை நீராற் கழுவப் பெற்றதனால், கயம் கண்வீற்றிருக்கும் சிறப்பைப் பெற்றது. நிரம்பிய புதுப் பூக்களின் செறிவினால், வயல் திருநயத்தக்க செவ்வி பெற்றது. உழவரின்