பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gಿeತಿ: 女 பரிபாடற் பகுதிகள் (1) 217 - கடல்நி ைதிரையின் கருநரை யோரும் - சுடர்மதிக் கதிரெனத் துநரை யோரும் மடையர் குடையர் புகையர்பூ ஏந்தி ... " + இடையொழி வின்றி அடியுறையார் ஈண்டி 45 விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும் - துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும் இருகேழ் உத்தி அணிந்த எருத்தின் வரைகெழு செல்வன் நகர், - - . . . . . - (இதுவும் மேல்வருவதும் கொச்சம்) இருந்தையூர் மக்கள் துன்பமற்று இன்பத்திலேயே திளைப்பவராக வாழ்ந்தனர். இதனால், அது துறக்கவுலகம் போல விளங்கிற்று. அந்த இன்பச்செறிவை வியந்து கூறுகிறது இப்பகுதி மகளிரது கூந்தற்புதுமலர்களில் தேனுண்ணக் க்ருதிதிவண்டினம் மொய்க்கும் அவர்கள் தம் கைகளை ஒச்சி அவற்றைத் துரத்துவர்.அவ் வேளையில் எழும் வண்டுகளின் ஆரவார ஒலியோடு அம்மகளி ரின் கைவளையல்களின் ஒலியும் பொரே ரெனச் சேர்ந்து எழும். பெண்கள் தம் காதுகளிலுள்ள கடிப்பு என்னும் அணியைக் கழற்றிவிட்டுக், கனவிய குழையினை அணிவர். கதவமாகிய காவலற்ற இதழ்களாகிய கட்டவிழ்ந்து மலர்ந்திருந்த மலர்களில் - முன்னர் எழுந்த வண்டினம் வந்து மொய்க்கும். அதனை வெருட்ட, அவர் தம் கையினைத் தூக்குவர். அப்போது கைவளைகளின் ஒலியும், வண்டினம் மொய்க்கும் ஆரவார ஒலியும் ஒன்று கலந்து எழும். - மின்னல் விட்டொளி வீசினாற்போல ஒளிவீசும் நெற்றி யினை உடையவரான மகளிரும், தாம் ஊர்ந்து செல்லுகின்ற களிற்றினைப் போன்ற ஆண்மையினைக் கொண்டவரான ஆடவரும் ஒருசார் வந்து நின்றனர். வாய்த்த இருளையொத்த கருங் கூந்தலைதயும், வரிகளையுடைய வில்லையொத்த வளைந்த புருவத்தையும், ஒளிபொருந்திய நெற்றிச்சுட்டி என்னும் அணியானது கிடந்தசையும் ஒள்ளிய நெற்றியையும் உடைய வரான மகளிர்களும் ஒருசார் நின்றனர். அறிவோடும் ஒன்றுகலந்து விளங்கிய புகழினையன்றித் தமக்கு வேறு அணிகளை விரும்பாதவரான புலவர்களும் அவ்விடத்தே ஒருசார் நின்றனர். கற்பு நலத்தோடு கல்ந்த நாணத்தையே தமக்குரிய அணியாகக் 'கொண்ட மகளிரும் ஒருசார் நின்றனர். ஆனேற்றோடு மாறுபட்டு, அதனை வெல்வ்ார்போல வீறுடன் நிமிர்ந்து நடக்கும் வெற்றியமைந்த ஆடவர் ஒருசார் நின்றனர். ஒழுக்கமும் மடமும் பொருந்திய நாணத்தினை மேற்கொண்ட மகளிர் ஒருசார் நின்றனர்.