பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - பரிபாடல் மூலமும் உரையும் கடலிடத்து வரிசை வரிசையாக எழுகின்ற அலைக்ளைப் - போன்று, கருமையும் நரையும் கலந்த தலைமயிரையுடையோரும்,' ஒளிரும் நிலவுக்கதிர் என்னுமாறுபோலத் தோன்றும் தூய நரையினைக் கொண்டோரும் ஒருசார் நின்றனர். இவர்கள் எல்லாரும் படைப்புக்கு ஆக்கிய பொங்கல் வகைகளுடனும், மங்கலக் குடையுடனும், நறும்புகைப் பொருள் களுடனும், நறும்பூக்களுடனும், அவற்றைத் தத்தம் கைகளில் ஏந்தியவராக வந்து நின்றனர். இடையே ஒழிவென்பது சற்றும் இல்லாதே, அடியவர்கள் பலரும் மேற்கண்டவாறு திரண்டு வந்தனர். • . * • முற்செய்த வினையானது முதிர்ந்து அதன் பயனை ஊட்டுதற்கு வந்து செயற்பட, அச்சிறந்த பயனைத் துய்க்கும் இடமாக விளங்கும், மாறுபடாத சிறந்த சீர்மைகொண்டதுறக்கத் தைப்போல அக்கோயிலிடம் விளங்கிற்று. கருநிறப் படப்புள்ளிகள் அழகோடு விளங்கும் கழுத்தை உடையோனாகிய, வரைபோலும் மார்பினைப் பெற்ற செல்வ னாகிய சேடனின் திருக்கோயில், இவ்வாறு மக்கள் நெருக்கத் தால், விழவணியோடு எப்போதும் விளங்கலாயிற்று. சொற்பொருள் : பொரேரென - முன்னது ஒலியையும், பின்னது விரைவையும் குறிப்பன. வண்டு - முன்னது மகளிர் கையிடத்து வளைகளையும், பின்னது வண்டுகளையும் குறிப்பன. கடிப்பு - ஒருவகைக் காதணி, காதோலை என்பர்; கனங்குழை இடுதற்கு அமைந்த காதின் துளை பெரிதாகிச் செம்மையுறுதற்கு இடப்பெறும் சுருளான அணி. கடி - மணம். வேரி - தேன். இகுத்தல் - தாழத் தொங்கல். செம்மல் - தலைமை வாய் இருள் பனிச்சை - வாய்த்த இருளைப்போன்ற கருங்கூந்தல். வரிசிலை. கட்டமைந்த வில் புலம் - அறிவு. அளவிய பொருந்திய, நலம் - \ அழகுச் செவ்வி விடை ஆனேறு. இகலுதல் மாறுபடல். விறல் . வெற்றிப் பெருமிதம் நடை ஒழுக்கம். மடம்மேவிய நாண் - மடத்தைப் பொருந்திய நாணம், மடம் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. நிரைதிரை வரிசை வரிசையாக எழும் அலைகள். கருநரையோர் - நாற்பதுக்கும் அறுபதுக்கும் இடைப் படட வயதினர்; தூநரையோர் அறுபதுக்கும் மேற்பட்டோர். மடை-சமையல் மடையர்-அட்ட நிவேதனப்பொருட்களோடு வந்தவர். விளைந்து ஆர்வினை - விளைந்து முதிர்ந்த வினை : முதிர்தல் பயனை நுகரச் செய்தற்குரிய பருவத்தால், துளங்கா - மாறுபடாத இருகேழ் கருநிறம். உத்தி - புள்ளி, எருத்து தலை கழுத்துப்பகுதி. வரைகெழுசெல்வன் மலையொத்த மார்பைப் பொருந்திய சிறந்தவன்; ஆதிசேடன். வரைகெழு செல்வன் - சோலை மலையிடத்துப் பொருந்திய செல்வனும் ஆம்; அவன்