பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ufium-o popô o "Tulio வந்துற்றதெனக் கருதானாய் வேறு காரணம் யாதோவெனக் கலங்கினான்; தலைவியின் தோழியை நாடிச் சென்றான்; தலைவியைத் தனக்கு இசைவித்து உதவுமாறு வேண்டினான். அதனைக் கேட்ட தோழி அவனது பொருந்தாச் செயலைக் குறிப்பாக அவனுக்கு உணர்த்தியவளாக இப் பாடலைச் சொன்னாள்; சொல்லி அவனுக்குத் தான் உதவுவதும் இல்லையென மறுக்கின்றாள். . -- ஏரணி கொண்டார் இயல் மாநிலம் தோன்றாமை மலிபெயல் தலைஇ ஏமநீர் எழல்வானம் இகுத்தரும் பொழுதினான் நாகநீள் மணிவரை நறுமலர் பலவிரைஇக் காமரு வையை கடுகின்றே கூடல், - 'நீரணி கொண்டன்று வையை என விரும்பித் 5 தாரணி கொண்ட உவகை தலைக்கூடி ஊரணி கோலம் ஒருவர் ஒருவரின் சேரணி கொண்டு நிறம்ொன்று வெவ்வேறு நீரணி கொண்ட நிறையணி அங்காடி - ஏரணி கொண்டார் இயல்: 10 இப் பூமியின் நிலப்பகுதியில் தோன்றாதபடியாக, மிகுதி யான பெயலைப் பெய்யத் தலைப்பட்டு, உலகின்ைக் காக்கும் நீராக விளங்கும் சிறப்பினைக் கொண்ட எழில் மிகுந்த மேகங்கள், பெருமழையைப் பெய்தன. சையமலையிடத்தே அவை பொழிந்த மழைநீரானது, நாகமரங்கள் ஓங்கி உயரமாக வளர்ந்திருக்கும் நீலமணிபோல விளங்கும் மலைச்சாரற் பகுதிகளின் வழியாக இழிந்தோடியது. அவ்விடத்து நறுமலர்கள் பலவற்றையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதாய், அழகு பொருந்திய வையையாற்றின் வழியாக வந்து, கூடல்நகரையும் அடைந்தது. புதுப்புனலாலே வையை அழகுற்றது என்றபடி, மதுரை மக்கள் அனைவரும் அதன்கண் சென்று புதுப்புனலிற் களித் தாடற்குப் புறப்படலாயினர். அணியணியாகச் செல்லும் படையினருள், தூசிப் படையினர் அனைவர்க்கும் முற்படச் செல்லும் விரைவினராக விளங்குவர். அத்தகைய விரைவோடு நீராடுதற்கான உவகை மேலெழப்பெற்றவராக, மதுரையார் பலரும் வையைக் கரையை நோக்கிச் செல்வாராயினர். நீராடுதற் கேற்ற கோலங்களைக் கொண்டவராக ஒருவருக்கொருவர் முற்பட்டுச் செல்ல முயன்றவராக, அவர்கள் சென்றனர். ஒருவரோடு ஒருவராகச் சேர்ந்து சென்றவர்களின் அலங் காரங்கள் அவையவை தனிவண்ணத்தோடும், வெவ்வேறான வண்ணக் கலவையோடும் விளங்கின. பலவகைப் புனைவுகள் காண்பார்க்கு மயக்கினைத் தரும், அழகோடு விளங்கும்