பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 - பரிபாடல் ဇာလဖာဒီး உரையும் பொற்றேரான் தானும் பொலம்புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை: - - மதுரை மாநகரத்து மகளிரும் ஆடவரும், வையைக் கரையைச் சேர்ந்து, நீராடற் பொருட்டாகத் திரண்டிருந்த அழகைக் கூறுகின்றனர். - கைவினைத் தொழிலோடு புனையப்பெற்ற மாலைகளைச் சூடியவராகவும், முகர்ந்தார் 'ஐ'யென வியக்குமாறு நறும் புகையின் மணங்கமழும் புகையூட்டிய மயிரினராகவும், நறு நெய்யின் பூச்சினைப்பெற்ற கூந்தலினராகவும், உடலெல்லாம் அலங்காரஞ் செய்யப்பெற்ற யானைமீது ஏறியவராகக் குறையாத சிறப்பினைக் கொண்டவரும், அசோகந் தளிரின் இயலினைக் கொண்டவருமான மகளிர், ஒய்யென விரைந்து செல்வாராயினர். கைவினைத் தொழிலோடு புனையப்பெற்ற தலைக் கண்ணியை உடையோராயும், கண்டார் 'ஐ'யென வியக்குமாறு விளங்கும் ஆடையினராயும், நறுநெய் பூசிய தலைமயிரினராயும், அப் பெண்களின் தலைவர்கள் அவர்களைச் சூழ்ந்தவராக, பிடரிமயிர் பொங்கி எழுகின்ற குதிரைகளின்மேல் ஏறிச் செல்வாராயினர். - - மிக்க சிறப்புடைய வையம்’ என்னும் பெயர்கொண்ட வண்டிகளையும், தேர்களையும் புறப்படுவதற்கு ஏற்ற வகையில் அமைத்து அவற்றிலேறிச் சென்றனர் பலர்."யாம் இக் கூட்டத்துட் சென்று எவ்விடத்தும் காணாமற் போகோம் என்று கூறிய வராகத் தம் தோழியரையும் கூட்டிக்கொண்டு, தம் வீட்டாரினும் முற்பட்டுச் சென்றனர் இளமகளிர் கூட்டத்து நெரிசலால் தம் மெய்யாப்புக் கலைய, அதனைத் தம் உடலை மறைக்குமாறு இழுத்து மூடிக்கொண்டனர் அவர்கள். வையத்தில் இருந்த படியே சிலர் தம் கணவரோடு ஊடுவார்கள் அக் கணவன்மாரும் அவர் ஊடலைத் தீர்ப்பார்கள். அதனால் அம் மகளிரும் தம் ஊடல் நீங்கியவராகத் தெளிவடைவார்கள். - - களிப்பு மிகுதியினாலே ஆடிச் செல்வார் சிலர்; பாடிச் செல்வார் சிலர் ஆராவரித்தபடியே செல்வார் சிலர், நகையாடிப் பேசியபடி செல்வார் சிலர் நகைசெய்தபடி உரியார் பற்றுதற்கு வர அவர் பிடியிற் சிக்காமல் ஒடுவார் சிலர், ஒடித் தளர்வுற்று நிற்பார் சிலர் உற்றாரை விட்டு விலகிப்போய்ப் பின் அவரைத் தேடுவார் சிலர் இவ்வாறு பலரும் பலவாறான தன்மையினராக வையைக் கரையை நோக்கிச் செல்வாராயினர். அங்ங்னம் செல்பவரன்றி எவரும் ஊர்க்குத் திரும்புவாராக இலராயினர்.