பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hయul&తLLLEతీఱ(ల_ 227 . கற்றவரும், கல்லாதவரும் கயவ்ரும், மகப்பெற்றாரும், பெற்ற் கணவரைப் பிழையாது ஒழுகும் கற்புடைப் பெண்டிரும், பொற்றேரை உடையானாகிய பாண்டியனும், அழகிய மதிலாற். சூழப்பெற்ற கூடல் நகரத்து மக்களனைவரும், வையையின் துறைகளை நாடிச்சென்று முற்றுகை இட்டனர். . . சொற்பொருள் : ஐ வியப்பினை உணர்த்தும் இடைச் சொல். ஆவி புகை பித்தை ஆடவர் தலைமயிர். ஒய்யென விரைய. தங்கா - குறையாத, வையம்- ஒருவகை மூடுவண்டி புடை கூட்டி - துணையாகச் சேர்த்துக்கொண்டு. மெய்யாப்பு சட்டை போல்வது. கயவர் இழிந்தோர். பொலம் - அழகு - இகல் பல செல்வம் துறையாடும் காதலர் தோள்புணையாக மறையாடு வாரை அறியார்ம்யக்கிப் - - பிறையேர் நுதலியர் எல்லாரும் தம்முன் 30 நிகழும் நிகழ்ச்சி எம்பால் என் றாங்கே - + இகல்பல செல்வம் விளைத்தவன் கண்டிப்பால் அகல் அல்கும் வையைத் துறை: துறையிடத்தே நீராடுகின்ற தம் காதலரின் தோள்களே தமக்குரிய புணையாக் கொண்டு, துறையிடத்தே நிற்கும் அக் காதலர்க்கு உயரியவர் அறியாதபடி, மறைவாகப் பரத்தையர் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீராடும் அவரைக் கரையிலுள்ளார் அறியாதபடி மறைத்து மயங்கச் செய்தது வையைப் புனல் பிறையொத்த அழகிய நெற்றியினரான் மகளிர் எல்லோரும், தம் முன்பாகவே நிகழும் நிகழ்ச்சிகள் எம்மிடத் தேயும் நிகழ்தற்குரியன என்ற கூறியபடி, அவ்விடத்தே அருகே நிற்பாரோடு சொற்போர் பலவற்றைச் செய்தபடியிருப்பர். இத்தகைய மாறுபாடுகள் பலவற்றையும் விளைத்தபடி, அவற்றைக் கண்டு, அவ்விடத்து நின்றும் நீங்கி மேற்சென்று கொண்டிருந்தது புதுப்புனல். இத்தகைய துறைகளைக் கொண்டது வையை யாகும். - சொற்பொருள் : மறையாடுதல் - மறைவாக ஆடுதல், இவர் காதற் பரத்தையர் கரையிடத்து நிற்கும் இற்பரத்தையர் காணாமற்படிக்கு மறைவாக ஆடினர் என்க. இகல் பல செல்வம் . இகலாகிய பல செல்வம் இகல் ஆவது நின் காதலன் வாரான் என, வருவான் என்று கூறி இகலுதல். கண்டு இப்பால் அகல் அல்கும் என்று கூட்டுக; ஒரு துரையின் இக் காட்சிகளைக் கண்டபின், அதனின்றும் நீங்கி மெல்ல அடுத்த துறையை நோக்கிச் செல்லும் நீர் என்க. . . . - . . .