பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 - பரிபாடல் மூலமும் உரையும் பெரிதும் வியப்பு! காதலான் மார்பிற் கமழ்தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தல் இடைக்கண்டு மற்றது 35 தாதாஎன்றாளுக்குத் தானே புறன்தந்து - வேய்தந்தது என்னை விளைந்தமை மற்றது நோதலே செய்யேன் நுணங்கிழையாய்! இச்செவ்வி போதலுண் டாங்கொல் அறிந்து புனல்புணர்த்தது ஓஒ பெரிதும் வியப்பு: * 40 தலைவன் தனக்குக் கீழ்ப்புறமாக நீராடிக் கொண்டிருந்த ஓர் இளம் பரத்தையைக் கண்டான். அவள்பால் அவன் மனம் சென்றது. அவளும், அவனையும் அவன் நோக்கத்தையும் கண்டாள். அவள் தானும் அதே நோக்கோடு அவனைப் பார்த்தாள். அவளிடத்து அன்பு கொண்டானாகிய அவன், தன் மார்பிலே அணிந்திருந்த மணங்கமழும் தன் தாரினைக் கழற்றினான். புனலொடு அதனை அவளை நோக்கிப் போக விட்டான். அப்பரத்தையும் அத் தாரைத்தான் கைப்பற்றிக் கொண்டாள். அதனைத் தன் கூந்தலிற் குடியும் கொண்டாள். இவர்கள் இருவரின் செயலையும் பார்த்துக் கொண்டிருந்தாள் தானும் நீராடியபடியிருந்த மற்றொருத்தி. அவள் தலைவனின் காதற் பரத்தை அவள் மனம் வெதும்பியது. அந்த மாலையை என்னிடம் தா என்று கூறியவளாக அப் பரத்தையிடம் சென்று பூசலிடலானாள். அவள் அதனைத்தர மறுத்தாள். புனல் தானாகவே என்னிடத்தே இதனைக் கொண்டு தந்தது; என் கூந்தலிலும் சூட்டிற்று, அதனை உனக்குத் தாரேன்’ என்றாள் அவள். இஃது என்னேயோ! அவன் மாலையை எடுத்துப் புனலோடு விட்டதும், அதனை நீதான்.அணிந்ததுமாகிய விளைவைக் குறித்து யான் வருந்தமாட்டேன். ஆனால், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகளை அணிந்துள்ள வளே! இத்தகையவொரு வாய்ப்பு உண்டாதலுங் கூடுமென்று அறிந்து, அதனைப் புனலிடத்து அவன்றான் போகவிடவும், அதுதான் நின் கூந்தலை அழகுசெய்யவும் நிகழ்ந்ததே, அந்தச் செவ்விதான் எனக்குப் பெரிதும் வியப்பாயுள்ளது என்றாள் காதற் பரத்தை சொற்பொருள் : காதலன் - காதற்குரியான் தலைவன் புனல் வாங்கி - புன்ல் இழுத்துச் சென்று. வேய்தல் - சூட்டுதல் நுணங்கிழை - நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகள். ஒஒ’ வியப்பினை உணர்த்தும் இடைச் சொல்.