பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புலியூர்க்கேசிகன்_பரிபாடற் பகுதிகள் (2) 229 - நீயும் துணை - கயத்தக்க பூப்பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடும் முயக்குக்குச்செவ்வி முலையும் முயக்கத்து நீரும் அவட்குத் துணை கண்ணி நீர்விட்டோய்! நீயும் அவட்குத் துணை . 45 சேரிப் பரத்தை அதற்குமேல் யாதும் பேச்சு எழாதவளாக நின்றாள். காதற் பரத்தை அவளை விட்டுத் தலைவனிடம் சென்றாள். ^ - "மென்மை பொருந்திய மலர்மாலையை வெள்ளத்தில் இட்டனை நின் காமத்திற்கு உரியவளாம் சிறப்பினை உடைய, விரும்பத்தகுந்த அந்த அழகியைச் சென்று சேரத்தக்க வகை யறிந்து அதுவும் சென்று சேர்ந்தது. தலைக்கண்ணியை நீரில் விட்டவனே! தழுவுதற்குரிய செவ்வியமைந்த அவள் மார்பகங் களும், அவற்றைத்தழுவிச்செல்லும் இப் புதுப்புனலுமே அவட்குத் துணையாகவுள்ளன. இனி நீயும் அவட்குத் துணையாவாய்” என்றனள். - - - சொற்பொருள் : கயம் - மென்மை, பூ பூமாலையைக் குறித்தது. காமக் கிழமை - காமத்தால் உண்டாய உறவு: மணவுறவாகாது என்பதாம். செவ்வி - செவ்விதாம் காலம். 'கண்ணி நீர் விட்டோய்” என்றது. முன்னர்த் தன்னை அவன் அடைந்த நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியதுமாம். - புனலின் குறை பணிவில் உயர்சிறப்பின் பஞ்சவன் கூடல் மணியெழில் மாமேனி முத்த முறுவல் அணிபவளச் செவ்வாய் அறங்காவற் பெண்டிர் மணியணிந்த தம்முரிமை மைந்தரோடு ஆடித் தணிவின்று வையைப் புனல்; 50 தலைவன், அதன்பின் அவளைத் தெளிவித்து, அவளுடன் நீராடி இன்புறுகின்றான்.இனி, வையைக்குள்ள ஒரு குறையையும் கூறுகின்றனர். - - . எவர்க்கும் தான் பணிதல் என்பதற்ற உயரிய சிறப்பினை உடையவன் பஞ்சவனாகிய பாண்டியன். அவனுக்கு உரியது கூடல் நகரம், அதனிடத்தே, - நீல மணி போன்ற அழகிய கூந்தலையும், மாந்தளிர் . போன்ற மேனிவண்ணத்தையும், முத்துக்களைப் பேரன்ற பற். களையும், அழகிய பவளத்தைப் போன்ற சிவந்த வாயிதழ்