பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பரிபாடற் பகுதிகள் (2) - 233 மிச்சில் நீர் பாடிப் பாடிப் பாய்புனல் ஆடி யாடி - அருளியவர்; ஊடி ஊடிப் உணர்த்தப் புகன்று கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபு சிதையு சூடிச் சூடித் தொழுது தொழுது . . இழுதொடு நின்ற மலிபுனல் வையை 80. விழுதகை நல்லாரும் மைந்தரும் ஆடி - - இமிழ்வது போன்றது இந்நீர் குணக்குச் சான்றீர்! முழுவதும் மிச்சிலா உண்டு; - நீராடச் சென்ற மக்களும், தாமும் பாடிப்பாடிப் புனலிற் பாய்ந்து ஆடியாடி இன்புற்றனர். தமக்கு அருள் செய்தாரான . தலைவருடன் ஊடுவர் பெண்கள். அவர்களைத் தெளிவித்துக் கூடுவர் தலைவர்; அவர்கள் மீண்டும் ஊண்டும் ஊடுவர்; தலைவர்கள் மீண்டும் தெளிவிப்பர்; பெண்கள் மீண்டும் விருப்புடன் கூடி இன்புறுவர்.இவ்வாறு ஊடியும் கூடியும் காதலர் மகிழ்வினை உடையராயிருப்பர். r காணாமற் போனவரைத் தேடிப் பலவிடங்கட்குச் சென்று அலைந்தும் காணாமையால் உடலும் உள்ளமும் சோர்வுற்று விளங்குவர் சிலர். சிலர், சிறந்த மணமலர்களைச் சூடிச்சூடிப் புதுப்புனலைத் தொழுது தொழுது போற்றுவர். - இவ்வாறு ஆடவரும் மகளிரும கூடியாடிக் களித்தலால், மிக்க புனலையுடைய வையையும் சேறுபட்டது. சிறந்த அழகினை யுடையவரான மகளிரும்; அவர்தம் காதலரும் ஆடிக் கழித்தது போன்றுள்ளது. இந்நீராதலைக், குணத்தால் நிரம்பிய சான் றோரே, நீங்களும் காண்பீராக, முழுவதும் உண்டு கழித்த எச்சிலாக நீர்தான் விளங்குதலையும் காண்பீராக! - சொற்பொருள் : புகன்று விரும்பி. சிதைபு வருந்தித் தளர்ந்து இழுது-சேறு. மலிபுனல் - புனல்மிக்க விழுதகை சிறந்த அழகு. குணக்குச் சான்றீர் - குணத்தாற் சிறந்த சான்றீர்; வேற்றுமை மயக்கம். மிச்சில் - எச்சில். - விளக்கம் : நீர் கலங்கலாயிற்று என்பதனை நயமாக உரைக்கின்றனர்.மக்களின் வளமையும் இன்பு நாட்டமும் கூறினர். விழுநீர் அன்று சாந்தும் கமழ்தாரும் கோதையும் சுண்ணமும் , கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் 85