பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பரிபாடல் மூலமும் உரையும் - இரண்டாம் பாடல் - # திருமால் வாழ்த்து (2) பாடியவர் : கீரந்தையார் பண் வகுத்தவர் : நன்னாகனார்; பண் : பாலையாழ். - - தொழுது பேணுவோம்! தொன்முறை இயற்கையின் மதியொ..... மரபிற்றாகப் = * ده ه به » ه به ه ه به ه به ه به هم به " பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட விசும்பில் ஊழி ஊழுழ் செல்லக் - கருவளர்வானத் திசையில் தோன்றி 5 உருவறி வாரா ஒன்றன் ஊழியும் - உந்துவளி கிளர்ந்த ஊழுழ் ஊழியும், செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும், அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு - 10 மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும் - உள்ளி டாகிய இருநிலத் தூழியும், நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை - 15 கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவனை உணர்த்தலின் முதுமைக்கு ஊழி யாவரும் உணரா - ஆழி முதல்வ! நின் பேணுதும் தொழுது: ஊழிக் காலம் என்பது, இவ்வுலகத் தோன்றிப் பரந்து, மீளவும் அழிந்து ஒடுங்குவது வரையுள்ள ஒரு பரந்த கால எல்லையைக் குறிப்பதாகும். இவ்வாறு பன்முறை நிகழ்ந்து, பல்லுழிக் காலங்கள் கடந்துள்ளன என்பர். இதுகாலை நிகழ்ந்து வருவதான இவ்வூழியை வராக கற்பகம்’ என்றும் உரைப்பர். பழைமையாகத் தொடர்ந்து வருகின்றதான இயற்கை விதியின்படி, அதனையே முறையாகக் கொண்டு, பசிய பொன் மயமான தேவருலகமும், இம்மண்ணுலகமும் ஊழிமுடிவிலே அழிந்து பாழ்பட்டுப் போயின. வெளியாகிய வானமும் இல்லாது போயிற்று. ஊழிக்காலங்கள் பல இவ்வாறு தோன்றியும் ஒடுங்கியும் சென்றன. அதன்பின், கருவானது வளர்வதற்கு உரியதாகிய வானத்திசையிலே, மீளவும் கருத்தோற்றம் பிறந்தது. அஃது, உருவென எதனையும் அறிதற்கு இயலாத நிலையிலே பிறந்ததான ஒலியொன்றை மட்டுமே கொண்டதாக, நாத தத்துவப்பொருளாக இருந்தது. அத்தகைய முதலூழிக் காலமும்