பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uါgi4ီဒါဇိ၊ * பரிபாடற் பகுதிகள் (5,6,7) - 237 மேலேசெல்லத் தான் வாடாதிருக்கும் சிறப்பையுடையது, தென்னவனுக்கு உரிமையுடையதும், நான்மாடக்கூடல் எனப் படுவதுமாகிய மதுரைப் பேரூர் ஆகும். . சொற்பொருள் : புலம் - அறிவு. கோல் - துலாக்கோல். வாடல் வன்மை குறைதல். - w குறிப்பு : புறத்திரட்டிற் கண்டது; சிலர் முத்தொள்ளாயிரச் செய்யுளாகவும் கொள்வர். ஏழாம் பாடல் மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீருர், பூவின் இதழகத் தனைய தெருவம்; இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்; தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள், 5 தாதுண் பறவை யனையர் பரிசில் வாழ்நர்; . பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை - வாழிய வஞ்சியும் கோழியும் போலத் . 10 கோழியின் எழாதுளம் பேருர் துயிலே. - - மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூவோடு ஒக்கும் சிறப்புடையது மதுரைப் பேரூர். அப்பூவின் அக விதழ்களைப் போன்றவை மதுரைத் தெருக்கள். அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் கொட்டையைப் போன்றது. பெருமையிற் சிறந்தனாகிய பாண்டியனின் கோயில் அப்பூவிற்பொருந்தியுள்ள தாதினைப் போன்றவர் தண்தமிழ் மொழியைப் பேசும் மக்கள். அத் தாதை உண்ணுகின்ற வன்டினைப் போன்றவர்கள், மதுரைக் கண் வந்து பரிசில் பெற்று வாழ்கின்றவர்கள். அப்பூவினுள்ளே பிறந்தோனாகிய பிரமதேவனின் நாவினின்றும் பிறந்தவை நான்மறைகள். அவற்றைக் கேட்டறிந்தவர் அவற்றை ஒதும் ஒலி யானது எழும். அவ்வொலியினாலே மக்கள் இனிய துயிலின்றும் விழித்து எழுவர். அவ்வாறு துயிலெழுதல் அல்லது, வஞ்சியும் கோழியுமாகிய (உறையூருமாகிய) நகரத்து மக்களைப் போன்று, கோழியின் குரலால் மதுரைப்பேரூர் துயிலெழுதல் என்பது ஒருபோதுமே கிடையாது. - - சொற்பொருள் : மாயோன் - திருமால். புரையும் - ஒக்கும். பொகுட்டு - கொட்டை பறவை - வண்டு. நவில்தல் ஒதுதல். எடுப்ப - எழுப்ப ஏமம் - இன்பம். - குறிப்பு: இது புறத்திரட்டிற