பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பரிபாடற் பகுதிகள் (8,9,10,11) 239 கொடிபறக்கும் தேரினை உடையவன் பாண்டியன். அவன் ஆட்சிமொழியாக, அரசாணையாக விளங்குவது தமிழ்.அத்தமிழ் இருக்கும் வரையில், - கார்த்திகைப் பெண்களின் காதுகளில் விளங்கும் பொன் னாலான மகர குண்டலங்களைப்போலச் சிறந்த வளத்தால் பொலிவுற்று விளங்குதல் என்றில்லாமல், மதுரை நகரமானது குற்றப்பட்டு அழிதல்யீ என்பதும் உளதாகுமோ? ஆகாது காண்! சொற்பொருள் : கார்த்திகை-கார்த்திகைப் பெண்கள்.கனம் - பொன்; கனகம் என்பதன் இடைக்குறை. கோத்தை - குற்றம் - குறிப்பு: இது புறத்திரட்டிற் கண்டது. - பதினோராம் பாடல் ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் போவாரார் புத்தேள் உலகு. - இரப்பார்க்குக் கொடுக்கின்ற செல்வரைக் கொண்டாடுவர் மக்கள்; அவரோ தம்பால் ஏற்பார் தம்மிடம் பெற்ற பொருளால் மனநிறைவு பெறுதலைப் பார்த்து மகிழ்வார்கள். இத்தகைய மக்களையுடைய உயர்ந்த மாடங்களைக் கொண்ட மதுரையும், அதனைச் சார்ந்திருக்கும் செவ்வேளாகிய முருகனுக்குரிய திருப்பரங்குன்றமும் ஆகிய இடங்களில் வாழ்பவரே வாழ்ப வர்கள்’ என்று சொல்லப்படுவார்கள். மற்றையாருள், புத்தேள் உலகுக்குப் போவார்தாம் யாரோ? மதுரையாரும் பரங்குன்றத் தாருமே துறக்கவின்பமும் உலக வின்பமும் ஒருசேரத் துய்ப் பவராவார் என்பதாம். - - சொற்பொருள் : ஈவார் - கொடையாளிகள். செவ்வேள் - முருகன். . - - குறிப்பு : இது புறத்திரட்டிற் க்ண்டது. மதுரைப் பேரூர் மக்கள், வாழ்வியல் வளத்தினும், ஆன்மவியல் ஒழுக்கத்தினும் சற்றும் குறையற்றோராகச் சீருடன் வாழ்ந்தனர் என்பதாம். இதனால், அவர் இருமை இன்பத்தையும் ஒருசேரத் துய்க்கும் ஈடற்ற சிறப்பினராவர் என்பதுமாம். இதனைப்பாடிய புலவரின் நாட்டுப்பற்றோடு, அந்நாளைப் பாண்டிநாட்டின் அளவில் வளமையும் எழிலும் செப்பமுமம் இதனால் விளங்கும். 女 女。女