பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-திருமால் வாழ்த்து (2) - 17 சென்றது.அதனையடுத்• அசையும் காற்றுப் பிறந்தது காற்றின் இயக்கத்தோடுங் கூடியதாகத் திகழ்ந்த ஊழிகள் பலவும் தோன்றின. அதன் ஊழிக் காலங்களும் பல் தோன்றிக் கழிந்தன. அதனையடுத்துத் தண்ணிய பெயலைக் கொண்டதாக நீரின் ஊழிக் காலங்கள் தோன்றின. அதனால், எங்கணும் பெருவெள்ளம் நிறைந்தது. அப் பெருவெள்ளத்தினுள்ளே, அதனடியிலே இவ்வுலகமானது மூழ்கிக் ದಿ-ಹಣ திருமாலாகிய நீதான், அவ்வெள்ளத்துள்ளே மூழ்கினை ஆங்கு, வெள்ளத்தடியிலே மூழ்கிக்கிடந்த இவ்வுலகினை உயரே எடுத்து வெளிக்கொணர்ந்து, மீண்டும் நிலைபெறுத்தினை, இச்செயலுக்கு உள்ளீடாக அமைந்தது. பெரிய இந் நிலவூழி எனப்படுகின்ற ஊழிக்காலம் ஆகும். . . - - இப்படித் தோன்றிய நிலவூழியும் தோன்றித் தோன்றிய பின்னரும் பலகாலங்கள் அவ்வாறே கிடந்து வந்தது. நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், குற்றமற்ற கமலம், வெள்ளம் என்று சொல்லப்படும் பேரெண்களின் அளவான காலங்கள் பலவும் அப்படியே கழிந்தன. நின் செயற்குறிப்பின் தொகுதியாகி எழுந்த இவற்றையெல்லாம் அழித்தும் மீளத் தோற்றுவித்தும் வருகின்ற திருவிளையாட்டினை நீயும் தொடர்ந்து நிகழ்த்திவந்தன்ை நின் இச் செய்கையினை எண்ணி வரையறுத்து, இத் தன்மைத்தென உணர எவராலுமே இயலாது. பல்லுழிகளுக்கும் முற்பட்டவனாக, ஆதிமுதல்ாக, நீதான், நீ ஒருவனே தான் இருப்பவன். ஆதலின், நின் முதுமையையும் எத்தனை ஊழிகளின் அளவென எவரும் உணர்ந்து அறிய மாட்டார்கள்! இத்தகைய பழைமையினை யுடையவனே! சக்கரப் படையினை வலக்கரத்தே ஏந்தியுள்ள தலைவனே! நின்னைத் தொழுது, நின் புகழைப் போற்றுகின்றேம். எமக்கும் அருள்வாயாக சொற்பொருள் : தொன்முறை - தொன்மையான முறை மையையுடைய முறைமை என்பது நியதி; இது நெறி பிறழாமல் தொடர்ந்து வருவது. பசும் பொன் உலகம் - தேவர் உலகம், பசி பொன்மயமான உலகம். ஊழ்-தோற்றம் முளை, ஊழி-தோன்றி நிகழ்வது. உந்தல் அசைத்தல், பனி - குளிர்ச்சி. பீடு - பெருமை. நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன பேரெண்கள்; கோடிக்கும் மேற்பட்டவை. - - விளக்கம் : 'ஊழி முதல்வனும், அனைத்துக்கும் ஆதியும் திருமாலே என்று கூறுகின்றனர். அவனது பழைமையையும் சிறப்பையும் அவ்வாறு போற்றுகின்றனர். வானம் முதலில் தோன்றிற்று. அதனின்று காற்றும், நெருப்பும், நீரும், நிலமும் முறையே தோன்றின, இவை, மீள ஒடுங்குங் காலத்து நிலம்