பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பாடிய சான்றோர்கள் 245, அந்துவன் செள்ளை, சேரமான் அந்துவன் சேரல் இரும்பொறை என வரும் பெயர்கள் அந்துவன்' என்னும் பெயர் வழக்கினைக் காட்டுவனவாகும். அம்+துவன் - அழகிய செந்நிறத்தான் எனப் பொருள் படலின், இஃது இவர்களின் மேனி வண்ணத்தை யொட்டி அமைந்த பெயருமாகலாம். இறுதியாகிய அந்தத்தை அளிக்கும் தெய்வம் என்னும் கருத்தில் சிவபிரானுக்கும் இப்பெயர் பொருந்தும், ஆகவே, சிவன் பெயர் பெற்ற சிறப்பினர் எனவும் கருதலாம். - இவர் ஆசிரியர் நல்லந்துவனார்’ எனப் பிற சான்றோ ரானும் போற்றப்பெற்ற சிறப்பினை உடையவராவர். இப் பாடல்கள் அன்றியும், அகநானூற்று 43ஆம் செய்யுளையும், நற்றிணையின் 88ஆம் செய்யுளையும், நெய்தற்கலியின் 33 செய்யுட்களையும் செய்தவர் இவர். மேலும், கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையை ஆய்ந்து தொகுத்தவரும், அத் தொகைநூற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியோரும் இவராவர். இவை எல்லாம் இப் புலவர் பெருமானுடைய ஆழந்தகன்ற தமிழ்ப்புலமையின் செறிவையும் தெளிவையும் காட்டுவனவாகும். மதுரை மருதனிள நாகனார் என்னும் புலவர் பெருமான் பரங்குன்றனைப் பாட நினைக்கின்றார். அவர் கண்முன், பரங்குன்றோடு, அதனை மிகச் சிறப்புடன் பாடிய நல்லந்துவனாரும் தோன்றவே, அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை' எனப் பொற்றுவதுடன் அமை கின்றார். இது, நல்லந்துவனாரின் பெரும்புலமை நலத்தை, அக் காலப் பெரும்புல்வரும் போற்றிக் கற்று இன்புற்று நுகர்ந்த செவ்வியைக் காட்டும். இதனால், தம்மை யொத்த புலவரானும் புகழப்பெற்ற புலமைநலம் கொண்டவர் இவர் எனலாம். இனிக்கலித்தொகையைத் தொகுத்தார் இவரென்பதனால், இவரும் பிற சான்றோரின் செய்யுட்களை நயம்றித்து போற்றும் சால்புடையவர் என்பதும் அறியப்படும். கலித்தொகையின் செழுமை, இவர் ஆய்ந்து தொகுத்த ஆய்வுத் திறனின் செம்மையைக் காட்டுவதுமாகும். வையையின் புதுப்புனல் வரவைக் கண்டு களித்த இவருள்ளத்தே, அந்தப் புனல்வரவின் எழிலையும் பெருக்கையும் பற்றிய சிந்தனை ஆழமாக நிறைகின்றது. அதனைப் போற்ற நினைக்கும் இவர், தமிழ் வையை’ என வாய்குளிரக் கூறுகின்றனர். தமிழின் செழுமைக்கும் இனிமைக்கும் வையைப் புதுப்புனலை ஒப்பிட்டுப் போற்றிய சிறப்பை எவ்வாறு போற்றுவது இவர் எடுத்துக்காட்டும் கோள்நிலைக் குறிப்புக்கள் இவரது வானசாத்திரப் புலமையையும் காட்டுகின்றன. -