பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - பரிபாடல் மூலமும் உரையும் வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய நிலனுற நிமிர்தானை நெடுநிறை நிவப்பன்ன பெயலாற் பொலிந்து பெரும்புனல் பலநந்த நலனந்த நாடணி நந்தப் புலனந்த - வந்தன்று வையைப் புனல். - என்னுமிவர் சொற்கள், இவரது தமிழறிவைக் காட்டுவதுடன், இவரது நாட்டுப் பற்றையும், இவர் காலத்துப் பாண்டியரின் மறமேம்பாட்டையும் காட்டுகின்றன. - 'விதியாற்றான் ஆக்கிய மெய்க்கலவை போலப் பொதுநாற்றம் உள்ளுட் கரந்து புதுநாற்றம் செய்கின்றே செம்பூம் புனல் என்று, அக் காலத்தைய மணச்சாந்து கலக்கும் தொழிலது சிறப்பையும் நமக்கு இவர் உணர்த்துகின்றனர். கட்டுமீறிச் செல்லும் புதுப் புனலை, - 'ஆடலறியா அரிவை போலவும் ஊடலறியா உவகையள் போலவும் வேண்டுவழி நடந்து தாங்கு தடைபொருது' செல்லும் என்று கூறுவதன்கண், இவரது உலகியல் நுண்ணறிவு புலனாகின்றது. வெள்ளத்து வரவால் பலர் வருந்தினர் எனவும், பலர் களித்தனர் எனவும், இருவேறு தன்மைகளையும் சிறந்த காட்சி களை அமைத்துத் திறனுறக் காட்டியுள்ளனர் இவர். பெண்கள் கழுத்திற் பொன்னாண் பூண்டிருக்கும் வழக்கத்தை இவர் கூறுகின்றார்.இசையிலும் இவர் வல்லவராயினமை, புரி நரம்பின் கொளைப் புகல்பாலை ஏழும் என்பது முதலாக வரும் அடிகளால் அறியலாம். - - குன்றம் பூதனார் -9,18 பூதனார் எனப் பெயரிய பலருள்ளும், திருப்பரங்குன்றத் தைச் சார்ந்தவராதலின் இப்பெயர் பெற்றனர். இவர். இவர் தமிழறிவுடன் தமிழ்பற்றும் கொண்டவர். அந்நாளில் வட மொழிச் சார்பான பல கருத்துக்கள் தமிழகத்து வந்து பரவத் தொடங்கியதனை மறுப்பார்போல, இவர் பாடியுள்ள வள்ளி தேவானைப் பூசல் மிக்க சுவையும், அறிவுநலமும் பயப்பதாகும். சதுக்க பூதங்களின் பெயரை அந்நாளினும் மக்கட்கு இட்டு வழங்கும் மரபு நிலவி வந்தது. இதனைப் 'பூதன்' என்னும் பெயர் வகையினராகக் காணப்பெறும் பதினொரு சங்கப் புலவர்களின் பெயர்களால் அறியலாம். -