பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பாடிய சான்றோர்கள் - 253 நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்? . . என்பது இவருடைய தெய்வ நம்பிக்கையின் உறுதியைக் காட்டுவதாகலாம். . . - v . ar 'கனையெலாம் நீலம் மலர என்பது தொடங்கித் திருமாலிருங் குன்றத்தின் எழிலை மிகமிகச் சிறப்பாக வருணித்துப் போற்றுகின்றார் இவர். இதனால், இவர் திரு மாலிருங் குன்றத்தின்பால் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பது விளங்கும். - - எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ்வயின் மன்பது மறக்கத் துன்பம் களைவோன் அன்பாது மேஎஇருங்குன்றத்தான் என மாயோனின் சிறப்பையும், அவன் உலகத்துத் துயரைப் போக்கிக் காக்கும் காவலின் செவ்வியையும், இவர் வாய்குளிரக் கூறுகின்றனர். - நப்பண்ணனார் - 19 * பண்ணன் என்னும் பெயரினர் இவர். இப் பெயரின் பண்டை வழக்குண்மை, சிறுகுடிகிழான் பண்ணன் எனவரும் வள்ளல் பெயரானும் அறியப்படும். பண் திறம் அறிந்தவர் என்பதனாலோ, அன்றிப் பண்ணையும் உடையவராதலாலோ இப் பெயரினைப் பெற்றவராகலாம். இவர் பாடல் செவ்வேளைக் குறித்தது. - புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்' எனக் கூடலின் மாண்பையும், அறம் பெரிதாற்றி அத்ன பயன் கொண்மார், சிறந்தோர் உலகம் படருநர் என அறத்தின் சால்பையும், இவர் எடுத்துரைப்பர். மால் மருகனின் பரங் குன்றத்து மாடமருங்கிலே திகழும் சோபனநிலையை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் இவர் காட்டுகின்றனர். - மேலும் குமரனடிக்கண் தம்மை ஈடுபடுத்தியவராகத் தொழுது போற்றிப் பாடும் இப் பாடலின் ஒவ்வொரு பகுதியும் இனிமை நலத்தோடு செறிவுற்றுள்ள தன்மையை இப் பாடலுள் காணலாம். - - நல்லழிசியார் - 16,17 வையைக்கு உரியதான பதினாறாம் பாடலையும், செவ்வேட்கு உரியதான் பதினேழாம் பாடலையும் பாடியவர் 'இவர் அழிசி என்பது இவர் பெயராகலாம். இப் பெயர் வழக்கு ஆர்க்காட்டுத் தலைவனாக சேந்தனின் தந்தையது பெயரும் அழிசி எனக் கூறப்படுவதலால் விளங்கும்.