பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 . - பரிபாடல் மூலமும் உரையும் நீரிலும், நீர் நெருப்பிலும் என்னும் முறையே ஒன்று மற்றொன்றனுட் சென்று ஒடுங்கும். இவ்வாறு ஆன்றோர் பஞ்ச பூதத் தோற்றமுறைமையை உரைப்பர். அப் பஞ்ச பூதங்களுக்கும் முதல்வனாகியும், அவையே தானாகியும், அவற்றைக் கடந்து தனித்து நிற்பவனாகியும் விளங்குபவன் திருமால் என்பதாம். ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் ஒருவனுமே உலகேழும் அளித்தான் ஒருவனுமே உலகேழும் துடைத்தான் ஒருவனுமே உலகோடு உயிர்தானே (திருமந்:404) என்பதும் நினைக்க. அவ்வொருவனே திருமாலாகவும் காட்சிதருவான் என்பது இதன் கருத்து. - - . தொன்மை நிலை! நீயே, வளையொடு புரையும் வாலியோற் கவன் 20 இள்ையன் என்போர்க்கு இளையை யாதலும், புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும், வடுவில் கொள்கையின் உயர்ந்தோர்.ஆய்ந்த கெடுவில் கேள்வியுள் நடுவா குதலும். 25. இந்நிலைத் தெரிபொருள் தேரின், இந்நிலை நின்னிலைத் தோன்றும்நின் தொன்னிலைச் சிறப்பே; சங்கினோடு ஒப்பான நிறத்தைக்கொண்ட வெண்மேனி யன் பலராமன்; அவனும் நீயே! அவனுக்கு இளையோனாகிய 'கண்ணன் நீ என்போர்க்கு, அவ்வாறே அவன் தம்பியாகவும் நீயே தோன்றுகின்றனை நிறைந்த இருளொத்த கருநிற உடையையும், அழகிய் பனைக்கொடியையும் உடையோனாகிய அப் பலராமனுக்கு நீ முற்பட்டவன்’ என்போருக்கு, அவ்வாறே அவனுக்கு மூத்தோனாகவும் நீ காணப்படுகின்றனை குற்றமில்லாக் கோட்பாடுகளைக் கொண்டவர் உயர்ந் தோர். அவர் ஆராய்ந்த அழிவற்ற மறைகளுள், அவற்றின் நடுவான, அவற்றின் உட்பொருளாக அமைந்து விளங்குபவனும் நீயே! இந்நிலையவான, தெரிந்துள்ள உண்மைகளை எல்லாம் ஆராயின், இந்நிலையெல்லாம் நின்னிடத்துத் தோன்றும் நின் தொன்மைநிலையினது சிறப்பேயாகும்! • சொற்பொருள் : வளை - சங்கு. புரையும் - ஒக்கும். வாலியோன் - வெண்மேனியன் பலராமன். புதையிருள். நிறைந்த இருள் அடர்ந்த இருள். பொலம் - அழகு. வடு குற்றம். கெடு - அழிவு: காலவெல்லையும் ஆம் கேள்வி - கேட்கப்படுவது மறை. தெரிபொருள் - தெரிந்த மெய்ப்பொருள். விளக்கம் : திருமால்ே பலராமனாகவும், கண்ணனாகவும், அவர்க்கும் முற்பட்டோனாகவும், அவரவர் நினைப்பிற்கேற்பத்