பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 r - பரிபாடல் மூலமும் உரையும் வையையைப் பற்றிய இவரது மிகச் சிறந்த இலக்கியச் சுவையோடு, சிறந்த காதற் காட்சிகளையும் அருமையாகக் கொண்டதாக அமைந்துள்ளது. - - ஒரு திறம், பாணர் யாழின் தீங்குரல் எழ எனத் தொடங்கிப் பரங்குன்றின் செவ்வியை இவர் அழகுடன் எடுத்துரைக்கின்றனர். நல்லச்சுதனார் -21 - இவர் பரிப்ாடலன் 21ஆம் பாடலைப் பாடியவர் ஆவர். அச்சுதன் என்னும் திருமால் பெயரைக் கொண்டவர்; ஆனால் செவ்வேளைப் போற்றியவர். இப் பாடலுக்கு இசை வகுத்தவர் கண்ணகனார். ஆதலால், 16, 17, 18, 20ஆம் பாடல்களுக்குப் பண்ணமைத்த நல்லச்சுதனார் என்பாரும், 6, 8, 9, 19ஆம் பாடல்களுக்கு இசைவகுத்த மருததுவன் நல்லச்சுதனாரும், இவரும் வேறானவர் எனத் தெரிகின்றது. சீர் தரு கேள்வன் உருட்டும் துடிச்சீரால் கோடனிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவள்ஏர் ஆடை யசைய அணியசையத் தானசையும் வாடை உளர் கொம்பர் போன்ம்; வாளி புரள்பவை போலும் துடிச்சீர்க்குத் தோளுள் பெயர்ப்பவள் கண், - என, நாடகச் சுவையோடு பாடும் திறனுடையவர் இவர். இவருடைய பாடல், ப்ாடிப்பாடிச் சுவைத்துச் சுவைத்துக் களிக்கவேண்டிய பழந்தமிழ்த் தேனமுதம் ஆகும்.