பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பரிபாடல் மூலமும் உரையும் வல்லவர். இவர் பாடலுக்கு வகுத்துள்ள பண், பண்ணுப் பாலையாழ் ஆகும். - பெட்டகனார் - 3, 4 இவர் 3, 4 பரிபாடல்கட்குப் பண் வகுத்தவர். இவர் வகுத்த . பண் பாலையாழ் ஆகும். பெட்டகம் போன்று அனைத்தையும் அறிந்து அடக்கத்தோடு விளங்கியவரெனக் கருதலாம். மருத்துவன் நல்லச்சுதனார் - 6, 8, 9, 10, 19 மருத்துவன் என்பது இவரது தொழிற்சிறப்பைக் காட்டும். அச்சுதன் இவர் பெயர்; திருமாலின் பெயர்களுள் இதுவும் ஒன்றாகும். - - - நல்லச்சுதனார் - 16, 17, 18, 20 - இவ்ரும் அச்சுதன் என்னும் பெயரினர். 21ஆம் பாடலைப் பாடியவரும் இவரே. இதனால் இருவகைப் புலமையும் கொண்டவர் இவரென்று கருதலாம். -- கண்ணகனார் - 5, 21 இவரைப் பிசிராந்தையர் காலத்துப் புலவர் என்பர். புறப்பாட்டு 218ஐப் பாடியவர் இவர். நற்றிணையின் 78ஆம் . ." செய்யுளைச் செய்தவரும் இவரே. இவர் இசைவல்லாராகவும் இருந்ததனால் இப்பரிபாடற் செய்யுட்களுக்குப் பண் அமைத்து உதவியிருக்கின்றனர் எனலாம். . - - பித்தாமத்தர் - 7 பித்திகை மாலையினை அணிபவர் என்பது சொல்லின் பொருளாகும். - - கேசவனார் - 14 இப்பாடலை இயற்றி இசையும் வகுத்தவர் இவர்