பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : திருமால் வாழ்த்து (2) . . . 19 தோன்றி அருள்பவனாவான் என்பதாம். அனைத்தும் கடந்த அவனுக்கு இந்தக் குறிப்பிட்ட உருவெல்லாம் மாயத் தோற்றமே என்பதுமாம். - - உரை சிறந்தது ஓங்குயர் வானின் வாங்குவில் புரையும் பூண்அணிகவைஇய வாரணி நித்திலம் நித்தில மதாணி அத்தகு மதிமறுச் 30 செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம் வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண் வைவான் மருப்பின் களிறு மண்ணயர்பு புள்ளி நிலனும் புரைபடல் அரிதென . . . . . உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று: 35 - ஓங்கி உயர்ந்தது வானம். அதனிடத்தே வளைந்த வானவில் தோன்றும் அதனையொத்து ஒளிவிளங்கும் பலநிறப் பூண்களை அணிந்தவன்; அவற்றிற்கு இடையே வாரால் தொடுக்கப்பெற்ற அழகிய முத்தாரத்தை அணிந்திருப்பவன்; அதனிடத்தே முத்துப்பதித்த பதக்கம் விளங்கத் திகழ்பவன் நீ அழகிற் சிறந்தது அப்பதக்கம். அது முழுநிலவைப் போன்று ஒளியுடன் தோன்றும். குற்றமற்ற நின் மார்பினிடத்தே செய்யோளாகிய திருமகள் நிலையாக வீற்றிருப்பாள். அவளிருக்கும் நிலை நித்திலப் பதக்கமாகிய மதியிடத்தே மறு ஒன்று அமைந்து விளங்குவது போன்று காணப்படும். * r - மிக்கெழுகின்ற அலைகளாலே கழுவப்பட்ட ஒளி விளங்கும் புள்ளிகளுக்கு இடையே, கூர்மையான வெள்ளிய நின் கொம்பு களுக்கு இடையே, நிலமகள் தானும் ஒரு புள்ளி போலவே அந்நாளில் விளங்கினாள். வராகக்களிறாகிய நீதான் அவளை அந்நாளிலே எடுத்து மணந்து கொண்டாய். நிண் கொம்பிடத்துப் புள்ளிகளுள், தானும் ஒரு புள்ளியளவாகவே விளங்கிய நில மகளும் ஏதும் துன்புறுதல் அரிது’ என்னுமாறு, அவளை நீதான் தாங்கிக் காத்தனை இவ்வாறு ஊழிவெள்ளத்துள் மூழ்கிக்கிடந்த நிலமகளை எடுத்துக் காத்த நின் சிறப்பினை எண்ணுவோர், நின் ஆற்றலைப் புகழ்ந்து உரைப் பார்கள். அப்புகழுரைகளோடு, நின் செயலும் மென்மேலும் சிறந்து விளங்கும்” சொற்பொருள் : வாங்கு வில் வளைந்த வில் வானவில் பூண் - அணி; மாலை. கவைஇய - சூழ்ந்து கிடக்க, நித்திலம் - முத்து. மதாணி - பதக்கம். பொறி - புள்ளி. நாப்பண் - நடுவே வை - கூர்மை, வான் மருப்பு - வெண் கொம்பு. களிறு - கேழலாகிய களிறு, மாலின் வராகவுருவைக் குறித்தது. புள்ளி நிலன் - புள்ளியளவே தோன்றிய நிலவுலகம், நிலமகள். i -