பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - பரிபாடல் மூலமும் உரையும் விளக்கம் : திருமகள் நின் மார்புப்பதக்கத்து நடுவே ஒரு புள்ளிபோல விளங்குவாள்; நிலமகள் நின் புள்ளிகளைக் கொண்ட கொம்பின் இடையிலே தானும் ஒரு புள்ளி போன்று விளங்குவாள்' என்பதாம். இதனால் திருமாலது பேராற்றலும், ப்ேருருவும், பெரும்புகழும் உரைக்கப்பட்டன. கோட்டிற் கொண்டு நிலமகளை மணந்த காலத்து, மார்பில் மறுப்போலச் செய்யவளைக் கொண்டிருத்தல் சிறப்பாகுமோ?’ என்று சொல்லலும் ஆம். அவள்தான் செய்யவள் ஆதலின், அதனை ஏற்றிருந்தாள் என்பதும் ஆம். - நின் படை! - ஒடியா உள்ளமொடு உருத்தொருங்கு உடனியைந்து இடியெதிர் கழறும் காலுறழ்பு எழுந்தவர் கொடியறு பிறுபு செவிசெவிடு படுபு முடிகள் அதிரப் படிநிலை தளர -- நனிமுரல் வளை முடியழி பிழிபு 40 தலையிறுபு தாரொடு புரள நிலைதொலைபு வேர்தூர் மடல் குருகு பறியா நீளிரும் பனைமிசைப் பலபதி னாயிரங் குலைதரை உதிர்வபோல் நில்லாது ஒருமுறை கொய்யுபு கூடி ஒருங்குருண்டு பிளந்து நெரிந்துருள்பு சிதறுபு அளறு சொரிபு நிலஞ் சோரச் சேரார் இன்னுயிர் செகுக்கும் போரடு குருசில் நீ ஏந்திய படையே; தளர்ச்சியற்ற உள்ளத்தோடு கூடியவராக, நின்பாற் சினங் கொண்டவராக, ஒருங்கே ஒன்றுபட்டுப் பலரும் திரண்டு கூடியவராக, காற்றை யொத்த வலிமையும் விரைவும் கொண்ட வராக, இடியொத்த முழக்கத்தைக் கொண்டவருமாகப் பகைவர் நின்மேற் போருக்கு எழுத்தனர். அவர்களின் கொடிகள் அற்று வீழவும், செவிகள் செவிடுபட்டுப் போகவும், மணிமுடிகள் அதிர்ந்து வீழவுமாக, அவர்கள் நின்றநிலை முற்றவும் கெட்டழியு மாறு, மிக்க குரலோடு நின் சங்கமும் அந்நாளிலே முழங்கிற்று. நின் கையில் ஏந்திய சக்கரப் படையானது, நின் பகைவரின் தலைகள் எல்லாம் அறுபட்டு வீழவும், அறுபட்டு வீழ்ந்த அத்தலைகள் அவர் கழுத்து மாலைகளோடு கிடந்து புரளவும், அவர்களை நிலைகெட்டுஅழியுமாறு செய்தது. தம் நிலை வெட்டுப்பட்டுப் போக, வேரும், துரும் , மடலும், குருத்தும் சிறிதும் அழிவெய்தாதிருக்கவும், நெடிய கரிய அப்பனைகளின் மேலுள்ள பலவான பதினாயிரம் காய்களைக் கொண்ட