பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. . - unut-o oooo earu: நின் திருமேனியது விளங்கும் ஒளியானது சிறந்த கரிய மணியைப் போன்றது.நின் கண்கள் புகழ்மிகுந்ததாமரை மலர்கள் .# இரண்டைஇணைசேரப்பிணைத்துவைத்தாற்போலத் தோன்றுவன நின் வாய்மை பொய்யாது விளங்கும் நாளினைப் போன்றது. நின் சிறந்த தவநிலைமையை ஆராயின் அதுதான் இப் பெருநிலத் தினும் பொறுமை மிக்கதாகும். யாவருக்கும் அருளுகின்ற நின் அருளின் தன்மையானது வானத்து மேகங்களைப் போன்றதாகும். இவ்வாறெல்லாம், நாவன்மை கொண்ட அருளாளர்கள், அருமறையின் உட்பொருளான நின்னைப்பற்றி, நின் செவ்வியைப் பற்றி, உரைத்துப் போற்றுவார்கள். சிவந்த வாயையுடைய கருடச்சேவலைப் பொறித்துள்ள, உயர்ந்த வெற்றிக் கொடியினை உடையோனே! முன்சொன்ன அப்பொருள்களையும், அவையன்றிப் பிறவான பொருள் களையும் ஒத்திருப்பவன் நீ! இவ்வாறு ஒப்பாயிருக்கும் நீயே, அவற்றைக் கடந்தவனாக, எவ்விடத்தானாகவும் பரந்து விளங்குகின்றன! wo- செற்பொருள் : ஒன்னார் - பகைவர். உடங்கு - ஒருசேர. அவிரழல் நுடக்கு - எரிசுடரின் அசைவு. இருள் திருமணி - கருமணி, நீலமணி. வைகல் - நாள். சாயல் - அருள். வான்நிறைவானத்து மேகங்கள். உவணம் - கருடச் சேவல். - விளக்கம்: நின்னை இவ்வாறு ஒப்பிட்டு யாம் கூறினாலும், தனக்கு ஒப்பேதும் இல்லாதவனாகிய நீதான், அவற்றைக் கடந்து, எவ்விடத்தானாகவும் விளங்குவாய் என்பதாம். வாய்மை வயங்கிய வைகல் என்றது. அதனுண்மை தெளிவாவது போலவே, அவனுண்மையும் தெளிவென்றதாம். . காணும் வரவு கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படிநிலை வேள்வியுட் பற்றியாடு கொளலும் புகழியைந் திசைமறை உறுகனல் முறைமூட்டித் திகழொளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும் நின்னுரு புடன் உண்டி பிறருடன் படுவாரா நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு: அந்தணர்க்குத் திருமால் எவ்வாறு வந்து தோன்றிக் காட்சி தருவான் என்பதனை இங்குக் கூறுகின்றார்: 65 வேதங்களுள் தேர்ந்த வேள்வித் 5೧೧೧|| சொல்லும் மந்திர மொழிகளினும், படிப்படியான நிலையையுடைய வேள்விச் சாலையுள் இடப்படும் யாகபலியாகிய ஆட்டினைக்