பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i | HుuఅతీDIలLéL(ల_ 25 விளக்கம் : வி பிணியினின்றும் விடுபட்டு உயர்வதற்கு உதவும் பெருமானே’ என்று போற்றுகின்றனர். அவன் சேவடி களைப் புகலிடமாகக் கொண்ட அடியவரே அந்நிலை பெறுவர்; இதனால் அவன் சேவடிகளுக்கு அச்சிறப்பை உரித்தாக்கிக் கூறுகின்றனர். மாசு காரணமாக வந்தடையும் பிற்வித்துயரை, மாசில் சேவடி போக்கும் என்கின்றார். மாயோனாகிய அவனையே மாயையின் பிடிப்பினின்றும் விடுபட்டுப் பிழைத்தற்குத் துணைக் கொள்ள விருமபுகின்றார்; இறைவனடி சேர்ந்தாரே பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்ப்தும் நினைக்க நின்னின் தோன்றியவை! தீவளி விம்புநிலன் ஐந்தும், - ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5 திதியின் சிறாரும், விதியின் மக்களும், - மாசில் எண்மரும், பதினொரு கபிலரும், தாமா இருவரும், தருமனும், மடங்கலும், மூவேழ் உலகமும், உலகினுள் மன்பதும், மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் - 10 மாயா வாய்மொழி உரைதர வலந்து, t நெருப்பும் காற்றும் வானும் நிலனும் நீருமாகியன ஐம்பெரும் பூதங்கள்; ஞாயிறும் திங்களும் என்னும் இவையிரண்டும் ஒளிதரும் பெருஞ்சுடர்கள்; அறம் பொருள் இன்பம் என்னும் அறநெறியின் தலைவனாகக் குறிக்கப் பெறுபவன் அறவோன்; செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பவர் ஐந்து கோள்களுக்கு உரியோர் திதியின் பிள்ளைகள் அசுரர் என்போர்; விதியின் மக்கள் ஆதித்தர் பன்னிருவர், வசுக்கள் எண்மரும் குற்றமற்றவர் எனப் போற்றப்படுபவர் உருத்திரர்கள் பதினொருவர்; அசுவினி தேவர்கள் இருவர் தருமதேவன் ஒருவன்; அவன் - ஏவலை மேற்கொண்டு உயிருண்ணுவது கூற்றம்; மேல் கீழ் நடுவென்னும் முந்நிலைகளில் ஏழேழாக அமைந்த உலகங்கள் இருபத்தொன்று; இவ்வுலகங் களுள் வாழ்வன எண்ணற்ற ... s : * உயிர்கள்; இவை அனைத்துமாகத் திகழும் மாயோனே அழிவற்ற வேதங்கள், இவ்வாறு சொன்னவற்றையே யாமும் மேற்கொண்டு, இவை அனைத்தும் நின்னினின்றும் தோன்றிப் பரவினவை எனச் சொன்னேம்! -- . . சொற்பொருள் : வளி காற்று அறன் - யாகத் தலைவன் எனவும் உரைப்பர். விதி - காசிபன். பதினொரு கபிலர் - உபபிரமர்கள். - விளக்கம் : உலகத்தோற்றத்திற்கு ஆதி காரணனாக விளங்குபவன் மாயோன்ாகிய அவனே என்கின்றனர்; சுத்த