பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 . . பரிபாடல் மூலமும் உரையும் மாயையாகிய சக்தியினின்றே அனைத்தும் தோன்றின என்று தத்துவங்களும் உரைக்கும். காசிபன் உபப்பிரமருள் ஒருவன்; இவனுக்கு மனைவியர் இருவர்; அவர் திதி, அதிதி என்போர்; இவருள் திதியின் மக்கள் அசுரர்கள்; அதிதியின் மக்கள் சுரர்கள். தொழாரும் உளரோ வாய்மொழி ஓடை மலர்ந்த - தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீயென மொழியுமால் அந்தணர் அருமறை; - ஏஎர் வயங்குபூண் அமரரை வெளவிய அமிழ்தின் 15 பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை! . பயன்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் நிவந்தோங்கு உயர்கொடிச் சேவலோய்! நின் சேவடி தொழாரும் உளரோ! அவற்றுள் கீழேழ் உலகமும் உற்ற அடியினை! 20 வாய்மொழி எனப்படுவன வேதங்கள். அவை தொடர்ந்து கேட்கப்பட்டே வருவன. இத்தகைய ஒட்டத்தை உடைய அவ்வோடையிலே மலர்ந்த தாமரைப் பூவினுள்ளே பிறந்தான் அயன். அவனும், அவனுக்குத் தாதையாக விளங்குவோனும் நீயே! இவ்வாறு அந்தணரின் அரிய மறைகள் நின்னைக் குறித்து உரைக்கின்றன. - - - - அழகு விளங்கும் பூண்களை உடையோர் அமரர்கள், அவரிடத்தினின்றும் கைப்பற்றிய அமிழ்தத்தால் தன்னைப் பெற்றவளின் துயரத்தைப் போக்கியவன் கருடன், அக் கருடனா கிய புள்ளினை ஊர்தியாக உடையோனே! - - பெற்றவளின் துயரைப் போக்கிய அக் கருடப் புள்ளின் உருவத்தைப் பொறித்த, உயர்ந்து விளங்கும் வெற்றிக் கொடியையும் உடையோனே! - - - நின் சிவந்த பாதங்களைத் தொழாதவரும் உளரோ அத் திருவடிகளுள் கீழேழ் உலகங்களிற் பொருந்திய ஒரு திருப்பாதத்தையும் உடையோனே! - - சொற்பொருள் : வாய்மொழி - வேதம் ஒடை ஓட்டத்தை உடையது. ஏஎர் - அழகு. புள் - கருடப்புள். பயந்தோள் - தாய்: அவள் பெயர் விந்தை . . - - விளக்கம் : உலகம் மீளவும் தோன்றுங்காலத்தே, ஊழி வெள்ளத்தே அறிதுயில் அமர்ந்திருக்கும் மாயவனின் உந்தியிலி ருந்து ஒரு தாமரை மலரும்; அதனின்றும் பிரமன் தோன்றி உலகைப் படைப்பான் என்பது புராணம். தாயின் அடிமைத்