பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் ★ திருமால் வாழ்த்து (3) 27 - தளையை அறுக்கக் கருடன் தேவரை வென்று, அவர் காப்பில் இருந்த அமுதத்தைப் பற்றிக் கொணர்ந்தான் என்பது கருட புராணம். திருமால் வாமனனாக மாவலியிடம் இரந்து பெற்ற மூவடிநிலத்தை அளந்து கைக்கொண்ட காலத்தே, அவன் திருவடிகளுள் ஒன்று கீழேழ் புவனங்களினும் சென்று பொருந்திற்று என்பதும் புராணம்.இவற்றால் திருமாலின் சிறப்புக் கூறப்பெற்றது; அவன் பேருருவாம் பெருந்தன்மையும் உரைக்கப் பெற்றது. - பாடுவார் வகை தீசெங் கனலியும் கூற்றமும் ளுமனும் - மாசில்ஆயிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும், - மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் 25 சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் எனவும், ஞாலத்து உரையுந் தேவரும் வானத்து நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர். பாடும் வகையே.எம் பாடல் தாமப் - பாடுவார் பாடும் வகை! - 30 அனைத்தும் ஒடுங்குதற்குரிய சர்வ சங்கார காலத்திலே, அனைத்தையும் எரித்தொழிக்கும் பெருநெருப்பாக விளங்கு பவனும், அனைத்துயிரையும் பற்றிச்செல்லும் கூற்றமாக நிற்பவனும் அனைத்துக்கும் விதிப்படி பயன்களை விதிக்கும் விதியாக அமைவோனும், எல்லாமும் நீயே! - குற்றமற்ற ஆயிரம் சுடுகதிர்களைப் பரப்புகின்ற ஞாயிறாக விளங்குவோனும் நீயே! - - . . இவை அனைத்தும் ஒன்றாகக் கூடி உலகை அழித்து ஒடுக்கு கின்ற ஊழியிறுதிக் காலத்திலே, கடலினிடத்தே, இப்பெரிய நிலவுலகத்தை நிறம்பொருந்திய பன்றியாக உருக்கொண்டு, கொம்புகளினாலே பேர்த்தெடுத்துக் கொணர்ந்து காத்த கருணையோனும் நீயே! - அவ்வூழிக் காலத்தே, பெரிய விசும்பினின்றும் விடாது பெய்துகொண்டிருந்த ஊழிப் பெருமழையாலாகிய வெள்ள மானது வற்றும்படியாக, அன்னச் சேவலர்க உருக்கொண்டு, சிறகரினால் விசிறிக் காத்தவனும் நீயே! இவ்வுலகத்தே வாழ்வோரான தேவர்களும், வானத்துக் கண் வாழ்வோரான முப்பத்திரண்டுவகைத் தேவரும் நின்னை விரும்புவர் நின் புகழைப் பாடுவர். அவர் பாடும் மேற்குறித்த அவ்வகையே, யாம் பாடும் எம் பாடலும் விளங்கும். இவ்வாறு