பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 28 r - பரிபாடல் மூலமும் உரையும் முன்னர்ப் பாடியோர் பாடியவகையே தொடர்ந்து பாடுவது என்பதன்றி, எவர்தாம் நின் புகழைத் தாமே கண்டறிந்து பாடுதற்கு வல்லார்? சொற்பொருள் : தீ ஊழித் தீ. செங்கனலி - செந்நெருப்பு: கனலுதல் உடைமையால் கனலியாயிற்று. கூற்றம் - உயிரை உடலினின்றும் கூறுபடுத்துவது. ஞமன் - வினைக்கேற்ப உயிர்களைச் செலுத்துபவன். ஊழி - கடல். உருகெழு நிறம் பொருந்திய புலர்த்தல்-காய வைத்தல். ஞாலத்து உரையும் தேவர் - உலகின் கோயில்களிலும் தேவகோட்டங்களிலும் பிறவற்றிலும் நிலைபெற்றுநின்று காக்கும் காவல் தெய்வங்கள். நாலெண்தேவர் -உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், சூரியர் பன்னிருவர்; மருத்துவர் இருவர் ஆகியோர் இவர் முப்பத்திருவர் என்பர். விளக்கம் : ஊழிக்காலத்துப் பெருவெள்ளமாகப் பரவி எங்கும் நிறைந்த கடலின் ந்டுவே கிடந்த உலகினைக் கேழலாய்ச் சென்று, கொம்புகளால் எடுத்து வந்தவன் மாயோன் என்பது புர்ாணம். திருமால் அன்னச் சேவலானதற்குச் சிவபிரானின் முடிதேடப் போயின கதைக்குமாறாகப் புதியதொரு கதை இங்கே காணப்படுகிறது. ஞாலத்து உறையும் தேவரை, மனிதராகப் பிறந்தும் தெய்வமாகி உயர்ந்த சித்தர், முனிவர், சான்றோர், பக்தர், கற்புடைமகளிர் எனவும் கொள்ளலாம். அவரும் தெய்வமாக நின்று அருளுதலால், - இரு கை மாலே!. கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல் - எரிசினம் கொன்றோய்! நின் புகழுருவினகை; நகையச் சாக நல்லமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயமில் ஒரு கை; இரு கை மால்! 35 'கூந்தன்மா' என்னும் உருவோடு நின்னைக் கொல்ல வந்தவன்கேசி என்னும் அரக்கன். எரியை ஒத்த சினத்தோடு வந்த அவனை, நீதான் கொன்றனை! - நின் புகழை எல்லாம் தன் செயலாகவே கொண்டு, அப்புகழின் உருவாக விளங்கும் கையினைக் கொண்டோய்! அமுதம் பங்கிட்ட காலத்தே மோகினியாக ஆடிப் பாடி, அசுரரை நமையாடச் செய்து, சிரித்தே சாகுமாறு அழித்து, அமுதைத் தேவருக்குத் தந்தனை நன்மை விளைப்பதாகிய அவ்வமுதங் கலந்தது நின் ஒரு கை இருசாராருக்கும் சமமாகத் தருவதற்கு மாறாக, நடுவுநிலை பிறழ்ந்த நயமற்ற ஒரு கையினையும் கொண்டோனே! -