பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் # திருமால் வாழ்த்து (3) - - 29 இவ்வாறு இரு கைகளைக் கொண்டோனாக விளங்கு வோனே திருமாலே! . - - சொற்பொருள் : கூந்தல்-கேசி என்னும் அரக்கன். நகையச் சாக சிரித்தே சாகுமாறு திறம்பிய மாறுபட்ட - - விளக்கம் : கொடியோனைக் கொன்DI புகழால் சிறப்புற்ற ஒரு கையினையும், நடுநிலை பிறழ்ந்த நயமற்ற ஒரு கையினையும், ஆக, இரண்டு கைகளைக் கொண்ட திருமாலே என்பதாம். - பல கைகள் - , - - முக்கை முனிவ! நாற்கை அண்ணல் ஐங்கை மைந்த அறுகை நெடுவேள்! எழுகையாள எண்கை ஏந்தல்: ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள! - - பதிற்றுக்கை மதவலி! நூற்றுக்கையாற்றல்! 40 . அவ்விரு ೧55@L-67 யோக தண்டமாகிய மூன்றாவது கையினையும் கொண்டோனாக முனிவனாக விளங்குபவனே! நான்கு கைகளைக் கொண்ட தலைவுனே ஐந்து கைகளைக் கொண்ட கணபதியே! இருபக்கத்தும் ஆறு கைகளைக் கொண்ட நெடுவேளே! . ஏழு கைகளைக் கொண்ட தலைவனே! எட்டுக் கைகளைக் கொண்ட முதல்வனே! ஒன்பது பெருங் கைகளைக் கொண்ட நிலைபெற்ற பெருமை கொண்டோனே! பத்துக் கைகளைக் கொண்ட் வலிமை மிக்கவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே சொற்பொருள்: முனிவன்-உலக இச்சைகளை முனிந்தவன். அண்ணல் தலைவன் மைந்தன் - குமாரன். நெடுவேள் - முருகன். ஏந்தல்-தலைவன். மதவலி - பெருவலிமை, - விளக்கம் : முக்கை முனிவன்' என்றது சிவனைக் குறிப்பதும் ஆகலாம். அவன் யோகநிலையிலே இருப்பவன் ஆதலின் முனிவன் என்றனர். நாற்கை அண்ணல் நான்கு வேதங்களையும் கைகளாகக் கொண்ட பிரமன். அறுகை நெடுவேள் என்றனர். நெடுவேள் பன்னிரு கைகளைக் கொண்டவன்; பக்கத்துக்கு ஆறான கைகளை உடையவன் என்று கொள்க. பிற, எங்கும் பரந்தவன் என்பது குறிக்க வந்தன வாகலாம். r எண் வரம்பு அறியா உடலினை! ஆயிரம் விரித்தகைம்மாய மள்ள! பதினா யிரங்கை முதுமொழி முதல்வ! .