பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பரிபாடல் மூலமும் உரையும் நூறாயிரங் கை ஆறறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்தென எண்வரம்பு அறியா யாக்கையை! 45 ஆயிரமாக விரித்த கைகளைக் கொண்டோனாக விளங்கும் மாயத்தில் வல்ல மள்ளனே! பதினாயிரங் கைகளோடுங் கூடிய வேத முதல்வனே! நூறாயிரங் கைகளோடுங் கூடிய, அறுவகை நெறியையும் அறிந்தோனாகிய கடவுளே! இவை அனைத்தும் முடிந்தன அல்ல. இவ்வாறு சொல்லப் படும் ஆம்பல் பல அடுக்கிய பேரெண்களின் அளவானகைகளை உடையாய்! இவ்வளவினது என எண்ணி அறிந்து, எல்லை அறியப்படாத, அத்துணை உடல்களை மேற்கொண் டோனே! சொற்பொருள் : மள்ளன் - மற்போர் வல்லவன். முது மொழி - வேதங்கள். ஆறு ஆறங்கங்கள் நெறியும் ஆம். கடவுள் அனைத்தும் கடந்தும் அனைத்தின் உள்ளாகவும் நிற்பவன். ஆம்பல் - ஒரு பேரெண். - வனப்பு வரம்பு அறியா மரபினை நின்னைப் புரை நினைப்பின் நீயலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ! நினக்கு விரிந்தகன்ற கேள்வி அனைத்திலும் வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம் பறியா மரபி னோயே! 50 தொன்மைக்கும் தொன்மையான மரபினை உடையோ னாகிய வேத முதல்வனே! நினக்கு ஒப்புமை சொல்ல நினைப்பின் அதுதானும் நீயேயல்லாது, பிரிதாக யாதொன்றனையும் நீயேனும் அறிவாயோ? - - நினைக்காவே பரந்து அகன்ற வேதவேதாந்தங்கள் அனைத் தினாலும் அறியமாட்டாத மரபினனே! ஆற்றலாலும், மனத்தாலும், உணர்வாலும், இவை எல்லாமும் சேர்ந்தும், நின் வனப்பின் எல்லையைக் காண முடியாதபடி விளங்கும் அளந்தறிய வியலாத தன்மையினை உடையவனே! - சொற்பொருள் : புரை ஒப்பு கேள்வி - வேதங்கள். வலி - ஆற்றல்,மனம் உணர்வு வலி என்பவற்றை மனம் புத்தி அகங்காரம் என்பார்கள். - விளக்கம்: தனக்குத் தானலது பிற ஏதும் ஒப்பற்றவன்; மனம் புத்தி அகங்காரங்களாலும் அறிந்துணர இயலாதவன் திருமால் என்பதாம். அத்தகையான் அவனாகலின் அவனை முன்னோர் போற்றிய மரபினை யொட்டியே தாமும் போற்றுவ தாக ஆசிரியர் கூறுகின்றனர். - - -