பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| புலியூர்க்கேசிகன் திருமால் வாழ்த்து (3) - 33 நெருப்பினுள் அதன் சுடுகின்ற தன்மையாக இருப்பவன் நீ! பூவினுள் அதன் மணமாக விளங்குபவன் நீ கற்களுள் மாணிக்கக் கல்லாக விளங்குபவன் நீ சொல்லினுள் வாய்மையாகத் திகழ்பவன் நீ! அறநெறிகளுள் அன்பாக நிற்பவன் நீ! மறத்த கையுள் ஆற்றலாக அமைந்திருப்பவன் நீ வேதங்களுள் மந்திர சொரூபமாக நிற்பவன் நீ ஐம்பெரும் பூதங்களுள் முதலாவதான வானம் நீ வெம்மையான சுடராகிய கதிரவனின் ஒளி நீ குளிர்ந்த சுடராகிய திங்களுள் தண்மையாக இருப்பவன் நீ! - | - காணப்படும் பொருள் அனைத்தும் நீ அப்பொருள்களின் உட்பொருளாக அமைந்திருப்பவனும் நீயே! ஆதலினாலே, தினக்குத் தங்குமிடம் என்பதும் நின்னிடத்துத் தங்குவது என்பதும் யாதுமில்லை. மெய்ப் பொருளாகவும், மறதியின் சிறப்பையுடைய மாயமென்னும் அனைத்துமாகவும், நீயே விளங்குகின்றனை , முதல் முறை, இடைமுறை, கடைமுறை என்னும் இம் முத்தொழில் நிகழ்ச்சிகளுள் அனைத்தையும் செய்பவனும் நீ! நீ பிறவாத பிறப்பென்பது யாதும் இல்லை. நின்னைப் பிறப்பித்தது என்பதும் யாதும் இல்லை. சொற்பொருள் :தெறல் சுடுதல் நாற்றம் மணம் மணி மாணிக்கம். அறம் - ஒழுக்கம். மறம் - தறுகண்மை. மறை மந்திரமாகிய மறைபொருள். பூதத்து முதல் - வானம் அளி அளிக்கும் தண்கதிர்மறவி - மறதி. * . . - விளக்கம் : அனைத்துமாகி, அனைத்தையும் பிறப்பித்தும், காத்தும், ஒடுக்கியும் விளங்குபவன் திருமாலே என்பதாம்; ஆயின் தனக்கொரு முதல் எனவொன்று இல்லாதவன் அவன் என்பதும் காத்தருள்வாய்! பறவாப்பூவைப் பூவினோயே! அருள்குடை யாக அறங்கோ லாக o - இருநிழல் படா.அமை மூவேழ் உலகமும் 75 ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ! காயாம் பூவைப் போலும் நீலவண்ணத் திருமேனியினை உடையோனே அருளே நின் கொற்றக் குடைய்ாக்வும், அறமே நின் செங்கோலாகவும் கொண்டு, இருவேறு நிழலின் கண்பட்டு அழியாமற்படிக்கு, மூவேழாகிய உலகங்களையும், நின் ஒரு குடைநிழலுக்கே உட்பட்டதாகக் கொண்டு, நீயே பேணிக் காத்து