பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - பரிபாடல் மூலமும் உரையும் கொடை புரத்தல் - காத்தல் நோன்மை - பொறுமை. ஒண்மை ஒளியாம் தகைமை, தோற்றம் - வெளிப்பட்டுத் தோன்றுதல். வருதல் பிறப்பு. ஒடுக்கம் - இறப்பு. - விளக்கம் : அனைத்துப் பொருள்களும் அவனிடத்திருந்து தோன்றி, மீளவும் அவனையே சென்றடைவன என்பதாம். எனினும், அவனே பலவாகவும் தோற்றுகின்றவன் ஆவன் என்பதும் ஆம். - - ஒப்பற்ற கருடக்கொடி! சேவ லோங்கு உயர்கொடியோயே! சேவ லோங்கு உயர் கொடி, நின்னொன்று உயர்கொடி பனை ; நின்னொன்று உயர்கொடி நாஞ்சில்; நின்னொன்று உயர்கொடி யானை ; r நின், ஒன்றா உயர்கொடி ஒன்றின்று; 40 கருடச் சேவலோடு உயர்ந்து விளங்கும் வெற்றிக் கொடி யோனே! கருடச்சேவலுடன் உயரப் பறக்கும் நின் கொடியோடு, நினக்கு உரியதாகச் சிறந்த பனைக்கொடியும் உயரப் பறந்தபடி இருக்கும். நின்னுடைய உயர்ந்த கொடிகளுள் மற்றொன்று கலப்பைக் கொடியாகும். நின் கொடிகளுள் மற்றொன்று உயரப்பறக்கும் யானைக்கொடியாகும். இவ்வாறு பலவான கொடிகளைக் கொண்டவன் நீ! எனினும் இவற்றுள் கருடச்சேவற் கொடியே ஒப்பற்றதாக உயர்ந்து விளங்குவதாகும். சொற்பொருள்: ஒன்றின்று- ஒப்பற்றது.நாஞ்சில்-கலப்பை, சேவல் - கருடச் சேவல். - - விளக்கம் : கருடன், பனை, கலப்பை, யானை என்னும் இவற்றைக் கொடிகளாகக் கொண்டாலும், இவற்றுள் சிறந்து விளங்குவது கருடக்கொடியே என்பதாம். அதன் சிறப்பை அடுத்துக் கூறுகின்றனர். - - பாம்பு! பாம்பு! விடமுடை அரவினுடல் உயிரொருங்கு உவணம் அவன், மடிமேல் வலந்தது பாம்பு; பாம்பு தொடி, பாம்பு முடிமேலன; பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; பாம்பு சிறை தலையன; - பாம்பு, படிமதம் சாய்ந்தோய்! பசும்பூணவை கொடிமேல் இருந்தவன் தாக்கிரை யதுபாம்பு; நஞ்சைக் கொண்ட பாம்பின் உடலையும் உயிரையும் ஒருங்கே உண்ணும் கருடன் அக் கொடியின்கண் விளங்குவான்.