பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 . பரிபாடல் மூலமும் உரையும் அவ்வவ் வடிவாகவே நின்று, நீயும் அவர்க்குத் தோற்றமளித்து விளங்குவாய்.இஃதன்றி,நினக்கெனக் குறிப்பிட்டவடிவென்பதும் வேறாக யாதுமில்லை. சொற்பொருள் : கடு நவை கொடிய துன்பம் அணங்கு தாங்கி வருத்தும் தன்மை, கடும்பு சினம். நல்கல் அருளல், கொடுமை - கொடியவே பிறர் மாட்டுச் செய்தலாம் தன்மை. செம்மை - செவ்வியவே செய்துஒழுகுதல், வெம்மை - அழிக்கும் தன்மை. தண்மை - அருளும் தன்மை, மனக்கோள் - மனத்துக்கண் கொள்ளும் கொள்கை, அதன் சார்பான வடிவு. ஏம் - காத்தல்: ஏமம் என்பதன் இடைக்குறை. - - в . விளக்கம் : அவரவ்ர் எண்ணங்கட்கும், நிலைகட்கும் ஏற்ப அவ்வவ் வடிவினனாகத் திகழ்தலன்றித், தனக்கென வடிவமாக ஏதும் இல்லாதவன் திருமால் என்பதாம். உள்வழி உடையை, இல்வழி இலையே’ என்னும் சொற்கள் இறைமையின் நல்ல விளக்கமாம். 3' - அருமறைப் பொருளே! கோளிருள் இருக்கை ஆய்மணி மேனி நக்கலர் துழாஅய் நாறினர்க் கண்ணியை! பொன்னின் தோன்றிய புனைமறு மார்ப! - நின்னின் தோன்றிய நிரையிதழ்த் தாமரை 60 அன்ன நாட்டத்து அளப்பரியவை! நின்னின் சிறந்த தாளினை யவை! நின்னின் சிறந்த நிறை கடவுளவை! அன்னோர் அல்லா வேறும் உள ; அவை - நின்னோர் அன்னோர் அந்தணர் அருமறை : 65 r அள்ளிக் கொள்ளலாம்படியான செறிந்த இருளுக்கு இருப்பிடம் போல்வதான, அழகிய நீலமணியை நிகர்த்த மேனி வண்ணத்தை உடையோனே! அதன்கண் மலர்ந்த பூங்கொத்துக் களோடுங் கூடிய துளசியினது மனங்கமழுகின்ற கண்ணியைச் குடியுள்ளோனே! பொன்னைப்போலப் பொலிவுடன் தோன்று கின்ற, திருமகளாகிய அழகிய மறுவினைக் கொண்ட மார்பை உடையோனே! நின்னிடத்திருந்து தோன்றிய அடுக்கமைந்த இதழ்களைக் கொண்ட தாமரை மலரினைப்போன்று விளங்கும் சிவந்த கண்களோடு அளப்பரிய சிரிப்பினையும் உடையோனே! - நின்னைக் காட்டினும் சிறப்புடையன நின் திருவடிகள். நின்னிட்த்தே சிறந்து விளங்கும் நிறைந்த கடவுள் தன்மையினை யும் நீ உடையை! அக்கடவுள் தன்மைகளே அல்லாமலும், வேறான சிறந்த தன்மைகளும் நின்னிடத்தே பலவாக உள்ளன.