பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

లోuఅతిఅతీతి(ల_3 அவை எல்லாம் நின்னையொத்த தேவவிருடிகள் மட்டுமே உணரும் அருமறைப் பொருள்களாகும். - சொற்பொருள் : கோள் - கொள்ளல், மணி - நீலமணி. நக்கலர் - அலர்ந்த பூவிதழ். இணர் - பூங்கொத்து. பொன்னின் - பொன்னையொப்ப; அழகெலாம் ஒருருக் கொண்ட தென்னு மாறு. நிரையிதழ் அடுக்கிய இதழ். கடவுள்.- கடவுள் தன்மை. விளக்கம் : தாம் சேர்ந்து இன்புறுதல் திருமாலின் அடிகளே யாதலின், அவற்றை அவனினும் சிறந்தவாகக் கூறினர். நிறை கடவுளவை’ என்றது, அவனின்றும் விளங்கிச் செயல்படும் பலவான கடவுள் நிலைகளை. எனினும், அவனை முற்றவும் அறிவோர் அவனையொத்த சான்றோரே என்பதாம். - எல்லாம் நீயே! அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்! எவ்வயினோயும் நீயே! நின் ஆர்வலர் 70 தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே, அவரவர் ஏவலாளனும் நீயே, அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே! செந்தீயையொத்த தழைகளையும், கொழுவிய நிழலைத் தரும் பல கிளைகளையும் கொண்ட ஆலமரமும், கடப்ப மரமும், நல்ல ஆற்றிடைக் குறைகளும், காற்று வழங்குதலைத் தடுக்கும் தன்மையுடைய குன்றங்களும், பிறவிடங்களுமாகிய அவ்வவ் விடங்களிற் பொருந்திய வேறுவேறான பெயர்களைக் கொண் டோனே! அவ்விடங்களன்றியும், மற்றையவான எவ்விடத்தினும் விளங்குவோனும் நீயே ஆவாய். நின் அன்பர்கள் நின்னைத் தொழுகின்ற அவ்வத்தன்மைகளின் அமைதிகளோடு அவ்வவ்வாறே பொருந்தியிருப்பவனும் நீயே யாவாய். - அவ்வன்பர்கள் எண்ணியவற்றை முடித்தலான் அவர்க்கு - ஏவலாளனாகத் திகழ்வோனும் நீயே. அவரவர்களால் தேடப் படுகின்ற அறம் பொருள் இன்பம் வீடாகிய, மெய்ப்பொருள் களுக்குப் பாதுகாவலனாக விளங்குவோனும் நீயே யாவாய். சொற்பொருள்: ೨çಮೆ -செந்தீ. குழை-தழை சினை-கிளை. ஆற்று நடு ஆற்றிடைக் குறை ஆற்று நடுவிலே விளங்கும் மேடு, கால் - காற்று. ஆர்வலர் - அன்பர். தொழுதகை அமைதி தொழுது போற்றும் தகைமையாகிய அமைதி, தொழும் கையிடத்தே பொருந்திருயிருக்கும் தன்மையுமாம். செய்பொருள் | |