பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - uñuni-do peoptó e-comujó எல்லாம் நின் ஆணையே! காஅய் கடவுள் சே எய்! செவ்வேள்! சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள் - வேலவன் ஏத்தும் வெறியும் உளவே; - 15 அவை. வாயும் அல்ல; பொய்யும் அல்ல; - நீயே வரம்பிற்றில் உலகம் ஆதலின் சிறப்போய்! சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்பாகலும் : பிறப்பினுள் இழிபாகலும் - - 20 ஏனோர் நின் வலத்தினதே; - s “பெருமானே! ஊழிக்காலத்தின் முடிவிலே அனைத்தை யும் அழித்துத் தானே தனியனாக நிற்கும் கடவுளாகிய சிவபெரு மானின் குமாரனே! செம்மை வண்ணத்தோடு அனைவராலும் விரும்பப்படும் சிறப்பைக் கொண்ட செவ்வேளே! சிறந்த குணங்களின் உருவாக விளங்குவோனே! எம் தலைவனே!" எனவெல்லாம் நின்னை அழைப்போனாகிய பூசாரியானவன், நின்னைப் போற்றித் துதித்து அழைத்து இயற்றும் வெறியயர் களத்துள், அச்சத்தை உண்டாகும் அவ் விழவுக்களத்தினுள், நீ அவன்பால் தோன்றிவருதலும் உண்மையே! அவ் வெறியயர்தலும், அதன்கண் நீ தோன்றுதலும் ஆகிய இவையெல்லாம் உண்மையானவையும் அல்ல; ஏனெனில் நீதான் அவற்றைக் கடந்து எங்கும் விளங்கும் பரம்பொருள் ஆதலின். ஆனால், நீதான் அங்கும் தோன்றி அவர்க்கும் அருளுதலின், அவைதாம் பொய்யானவையும் அல்ல. எல்லையற்று விளங்கும் இவ்வுலகினுள் காணப்படுவன அனைத்தும் நீயே. ஆதலின், அவ் வேலனின் பாட்டால் நீ சிறப்படைவாய் எனினும், அதுதான் நின் உண்மைப் புகழுக்கு மிகவும் குறைப்பட்டதே யாகலின், அப் பெருஞ் சிறப்பினின்றும் நீ நீங்கிவிடுவாய்! - - நல்வினைச் சிறப்பால் உயர்நிலை பெறுதலும், தீவினை மிகுதியால் இழிபிறப்பினை அடைதலும் என்பது பிறர்க் கெல்லாம் உளதாம். அவராகிய அப் பிறரும் நின் ஆணைக் கேற்பவே அவற்றை அடைகின்றனர். ஆகவே, நீதான் மிக்க சிறப்பினை உடையை என்பதாம். - * - சொற்பொருள் : காஅய்தல் கோபித்தல், காஅய்கடவுள் - சிவபிரான். செவ்வேள் - முருகன்; சிவந்த வேள். கருநிறத்து வேள், காமன்; அவன் மால்மகள். சால்வ - சால்புடையோய். பேஎ விழவு அச்சந்தரும் விழுவுக்களம்.வேலவன்-வேலனை வேண்டிப்பாடி அழைக்கும் வெறியாடி வலம் - ஆணை. - -