பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - பரிபாடல் மூலமும் உரையும் 'உங்கள் கூட்டத்தால் உண்டாகும் கருவைச் சிதைக்க வேண்டும் என்கின்ற ஒரு வரத்தை வேண்டிப் பெற்றான். அவ் விந்திரனுக்குத் தான் தந்தருளிய வரத்தினை மாற்றுதற்கு அரிது எனத் தான் வாய்மையாளன் ஆதலினாலே, சிவபிரான் சிந்தித்தான். நெருப்புக் கனன்று தணியாதே கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படை யைக் கொண்டு, அக் கருவின் உருவத்தை, மூவேழுலகங்களும் மருட்சி கொள்ளும்படியாகச் சிதைத்து, அழித்து விட்டான். - சொற்பொருள் : ஆதி அந்தணன் - பிரமன், அந்தணர் மரபுக்கு இவனே ஆதியாதலின், இவ்வாறு பெயர் பெற்றனன். பரி குதிரை கொளுவ செலுத்தநாகம்-பாம்பு இது வாசுகி மலை மேருமலை, முளிதல் வெந்தழிதல் மாதிரம் திசை பாகம் - அவிர்ப்பாகம். வதுவை மணம். விலங்கு - சிதைப்பாயாக குடாரி - மழு, உருவு கரு திரித்தல் அழித்தல்; சிதைத்தல். மருள வியப்பால் மயங்க. - * - விளக்கம் : திரிபுராந்தகனாகிய சிவபிரான் தன் சினந் தணிந்தோனாகி, உமையோடு கலந்து இன்புற்றிருந்த காலத்து உண்டாகிய, அச் சிவகருவைச் சிதைக்குமாறு இந்திரன் வேண்டி னான். சிவனும், அவ்வாறே சிதைத்துவிட, அது தான் சிதைந்து உமையின் கருப்பையினின்றும் கழிந்தது. அதனால் உலகம் மருண்டது, ஆதிசக்தியின் கருப்பைக் கருவும் சிதைவுற்று வீழ நேர்ந்த அந்த நிலையைக் கண்டு என்பதாம். மாதவர் மனைவியர் பெற்றனர்! கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை நொசிப்பின் ஏழுறு முனிவர் நனியுணர்ந்து வசித்ததைக் கண்ட மாக் மாதவர் - மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பின் சாலார், தானே தரிக்கென அவரவி 40 உடன்பெய் தோரே அழல்வேட்டு அவ்வவித் தடவுநிமிர் முத்தீப் பேணியமன் எச்சில் வடவயின் விளங்கால் உறையெழு மகளிருள் கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய - அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்; 45 மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் • நிறைவயின் வழாஅது நிற் சூலினரே, நிவந்தோங்கு இமையத்து நீலப் பைஞ்சுனைப் பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்; - சிதைவுற்று வெளிப்போந்த அச் சிவ கருவை ஏழு முனிவர்களும் பெற்றுக் கொண்டனர். சிவகுமரனின் உடலின் சிதைவுற்ற கூறுகள் அவை என்பதனைத் தம் நுண்ணிய