பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் செவ்வேள் (5) - - 49 - ஞானத்தால் அவர்கள் நன்றாக அறிந்தனர். வெட்டுப்பட்டுக் கிடந்த அதனைக்கண்ட அந்தப் பெருந்தவமுனிவர்கள், அவற்றைத் தம் மனைவியர் அப்படியே தம்முள் ஏற்று வளர்த்தனராயின், தம் கற்புநெறியில் நிறைவோடு திகழார் எனக் கருதினர். - - அதனால், அவர் யாகத்தியை விரும்பி வளர்த்து, அத்தி தானே அதனைத் தரிப்பதாக என, அதனுள் அவியோடுசேர்த்து இட்டனர். அங்ங்னம் அவியோடு சேர்த்து இடப்பட்ட அக்கருச் சிதைவும், யாககுண்டத்துள் ஓங்கி எழுந்த அம் முத்தீக்களாலும் உண்ணப்பட்டு, எச்சிலாக எஞ்சி நின்றது. வானத்து வடதிசைக்கண் வீற்றிருக்கின்ற ஏழு கற்புடை மகளிருள்ளும், கடவுள் தன்மைபெற்ற ஒப்பற்ற நட்சத்திரமாகிய அருந்ததி ஒருத்திமட்டும் நீங்கலாகக் கார்த்திகைப் பெண்கள் என விளங்கும் அறுவரும், அக் கருத் துண்டுகளைப் பெற்றுத், தாந்தாம் அந்நிலையே உண்டனர். - - குற்றமற்ற கற்பினை உடையவர், மகா தவசிகளின் மனைவியராகிய அவர்கள். அவர்கள் தம் நிறையுடைமை யினின்றும் வழுவாதவராக, அச் சிவகருவைத் தம் கருப் பையிலேயும் தாங்கினர். - மிகவும் உயர்ந்து விளங்குவது இமயம். அதன்கண் உள்ளதான நீலநிறமான பசிய சுனையிடத்தே மலர்ந்திருந்த தாமரை மலர்களாகிய படுக்கைகளில், அவர்கள் தனித்தனியாக ஆறு குழந்தைகளைப் பெற்றனர். . சொற்பொருள் : நொசிப்பு - நுண்ணுணர்வு வசித்தல் வெட்டல் நிறை-கற்பு தடவு - யாககுண்டம் முத்தீ ஆகவனியம், காருகபத்தியம், தட்சிணாக்கினி,ஆல்-கார்த்திகை மகளிர்; ஆரல் 'இடைக்குறைந்து நின்றது. சாலினி - அருந்ததி, நீலம் - நீலநிறம்: நீலநிறத் தருப்பைப்.புல்லும் ஆம் பாயல் - படுக்கை. - விளக்கம்: வருவது உணரா இந்திரன் சிவகருவைச்சிதைக்க விரும்பினான்; ஆனால், அது முடிவில் வளர்ந்து ஆறு குமரர்களாகப் பிறந்தது. இதனால், காலப்போக்கின் நியதியை இந்திரனாலும் மாற்றஇயலாது என்பதாம். -

  • * ஒப்பற்றவனே, வாழ்க!

பெரும்பெயர் முருக! நின் பயந்த ஞான்றே 50 அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன் - எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென அறுவேறு துணியும் அறுவ ராகி ஒருவனை வாழி! ஓங்குவிறல் சேஎய்!