பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 . udun-so podpiù உரையும் _ பெரும் புகழையுடைய முருகப் பெருமானே! நின்னை அவர்கள் அவ்வாறு பெற்றெடுத்த அந்நாளிலேயே, அரிதாகப் பொருந்திய சிறப்பினை உடையோனாகிய தேவர் கோமான், தன் நிலையைக் கடந்துவந்து, அக் குழந்தைகளைத் தாக்கினான். நெருப்பைக் கக்கும் வச்சிரப்படையைக் கொண்டு, ஆறாக இருந்த நின்னைத் தாக்கினான். வேறாகத் துண்டுபட்ட ஆறு துண்டுகளும் அறுவராகத் தோன்றிப், பின் அனைத்தும் ஒன்று பட்டு ஒருவனாக நீயும் விளங்கினை. அத்தகைய சிவகுமாரனே! நீ வாழ்க உயர்ந்த வெற்றியை உடைய செம்மேனியனே, நீவாழ்க! சொற்பொருள் : அமர் பொருந்திய, வச்சிரம் - வச்சிரப் படை துணி துண்டு விறல் - வெற்றி. - - - விளக்கம் : முருகனின் பிறப்பைப் பற்றிய பழைய செய்தி இவ்வாறு இதன்கண் உரைக்கப்படுகின்றது. ஆறு குழந்தைகளும் இந்திரனால் தாக்கப்பட்டு, ஒருவனாக ஒன்றி நின்ற செய்தியை அறிக. , * - - அனைவரும் கொடுத்தனர்! ஆரா உடம்பின்நீ அமர்ந்து விளையாடிய 55 போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய அல்லலில் அனலன் தன்மெய்யின் பிரித்துச் செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து வளங்கெழு செல்வன்தன் மெய்யின் பிரித்துத் திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன்; 60 திருந்துகோல் ஞமன்தன் மெய்யின் பிரிவித்து இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்; வளர்ச்சி பெறாத உடம்பினோடு நீ விருப்பமுடன் விளை யாட்டாகச் செய்த போரினிடத்தே, நின் வெறுங்கை களின் வலிமைக்கே எதிர்நிற்க இயலாதவனாக, இந்திரன் தோற்றான். அவன் தோல்வியுற்றதும், தேவர்கள் நின்னைப் பணிந்தனர். நினக்குத் திறையாகப் பலவற்றையும் வழங்கினர். - நின்னால் துன்புறாத போதினும், தீக்கடவுளானவன் தன் உடம்பினின்றும் ஒரு கூற்றைப் பிரித்தெடுத்து, அதனைச் சிறந்த கோழிச்சேவலாக்கி நினக்குரிய கொடியாகத் திகழுமாறு தந்தனன். வானத்துச் செல்வங்களுக்கு உரியோனாகிய இந்திரன், தன்னுடம்பின் ஒரு கூற்றைப் பிரித்துப் புள்ளிகளோடு விளங்கும் தோகை கொண்ட அழகிய மயிலாக ஆக்கி நினக்குரிய ஊர்தியாகத் தந்தான். -