பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பரிபாடல் மூலமும் உரையும் சேரார் சிலர் - நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறுதி நெஞ்சத்துச் சினம் நீடினோரும் - சேரா வறத்துச் சீரி லோரும் - . . . அழிதவப் படிவத்து அயரி யோரும் - 75 மதுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்; நின் குணமாகிய அருளைத் தம்பால் ஏற்றிருப்போரும், நின் பண்பாகிய அறத்தைத் தாமும் மேற்கொண்டோரும், நிலைபெற்ற நற்குணங்களை உடையோரும், பெருந்தவத்தினை உடையோரும், நின்னை வணங்கி நின்னை, வந்து அடைபவர் ஆவர். இவரன்றி, உயிர்களைக் கொல்லும் சினம் கொடிய நெஞ்சத்திடத்தே நீடித்திருக்கப் பெற்றோரும், அறநெறியின்கண் பொருந்தாது நிற்கும் சீர்மையில்லாதவரும், அழிந்த தவவடிவோடு நின்னை மறந்தவர்களும், மறுபிறப்பு என்பதே இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் ஆகிய இவர்கள், நின்னை ஒருபோதும் அடையவே மாட்டார்கள். சொற்பொருள் : நின் குணம் - நின் குணமாகிய அருளுதல். அறம் அறநெறி. செறுதி கொல்லும் தீத்தன்மை, சீர் - சிறப்பு. அயரியோர் மறந்தோர். மடவோர் - அறிவிலிகள். விளக்கம் : 'மறுபிறப்பு இல்லை. என்போர் நல்வினை தீவினைக் கூறுபாடுகளைக் கருதார்; ஆதலின் அறநெறி நில்லார்; அரும்பொருளைக் கருதார் என்பதாம். - - - யாம் இரப்பவை நின்னிழல் அன்னோர் அல்லது இன்னோர் சேர்வார். ஆதலின், யாஅம் இரப்பவை - பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்; அருளும் அன்பும் அறனும் மூன்றும் 80 உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே! - நின் திருவடி நீழலை முற்கூறிய தீயோரை அல்லாரான பிறர் சேர்பவராவர். ஆதலினாலே, உருளாகப் பூக்கும் கொத்துக் களைக் கொண்ட கடம்பினது தழைத்த மாலையினை அணிந் தோனே! யாம் நின்னிடம் இரப்பவை, பொருளும், பொன்னும், போகமும் அல்ல. அருளும், அன்பும், அறனுமாகிய மூன்றையுமே யாம் இரக்கின்றோம். அவற்றைத் தந்தருளி எம்மையும் காப்பாயாக! - சொற்பொருள் : உருள் உருண்டைத் தன்மை. ஒலித்தல் - தழைத்தல்.