பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- | புலியூர்க்கேசிகன் வையை (6) . . . . 53 - விளக்கம் : அறநெறிக்கண் நின்று, முருகப்பெரும்ான்பால் அன்பு செலுத்தி, அவனருளைப் பெற்று, நிலையான பேரின் பத்தை அடைய விரும்புகின்றவர், அவற்றை முறையே வேண்டு கின்றனர் அருளும் அன்பும் அறனும் என்னும் மூன்று சிறப்புக் களையும் விரும்புகின்றனர். . . " கடம்பின் ஒலிதாரோயே என்பதற்குக் கடம்பிலே வீற்றிருக்கும் தழைத்த மாலையை உடையோனே' எனவும், "கடப்ப மலர்களால் தழையக் கட்டப்பெற்ற தாரினை அணிவோனே எனவும் சொல்லலாம். கடம்பு-செங்கடம்பு; இது முருகனுக்கு உரியது. - . . . . - ஆறாம் பாடல் வையைடு பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்: பண் வகுத்தவர் : மருத்துவன் த்ாமோதரனார். பண் : பாலையாழ். வையை யாற்றிலே புதுவெள்ளம் வருகின்றது. மக்கள் களிப்புடன் சென்று நீராடி இன்புறுகின்றனர். தலைவன் ஒருவன் தன் இற்பரத்தையுடன் சென்று புதுப்புனல் ஆடி மகிழ்ந்தான். அதனைக் கேட்ட அவன் காதற்பரத்தை புலந்தாள். அவளை விரும்பிச்சென்றவன் அவள் ஊடலை நீக்கிக் கூடினான். வையை நீர் விழவணியும், தன் தலைவனின் செயல்களும், அத் தலைவனின் மனைவிக்குத் தெரிந்தது. அவள் பெரிதும் வருந்தினாள். தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு தன்பால் தூதுவந்த விறலிக்கு, அவனுடைய செயல்களைக் கூறித் தான் அவனை ஏற்கவியலாது என்று மறுத்து உரைக்கின்றாள். பெருங்குடி இல்லத்திலே நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. ஒரு தலைவனோடு தொடர்புடைய நான்கு பெண்களின் தன்மைகளை இது நளினமாக எடுத்துக் காட்டுகின்றது. - - இல்லத்தின் தலைவியாக விளங்கும் தலைமகள், பரத்தை எனினும், தலைவன் ஒருவனை மட்டுமே தனக்கு உரிமையாள னாகக் கொண்ட இற்பரத்தை பொருளுக்காகத் தலைவனை இன்புறுத்தும் காதற்பரத்தை அவன் ஏவிய தொழிலைச் செய்து அவனுக்கு உதவியாக அமைந்த விறலி; இந் நான்கு பெண்களை யும், அவர்களின் உள்ளப் போக்குகளையும் இப் பாடலிற் காணலாம். | இதனை அறிந்த ஆசிரியர் நல்லந்துவனார், இப் LIT-೯೧೧ುಲ பாடியுள்ளார். அந்நாளைய மதுரையிலே வாழ்ந்தாரான பெருங்குடித் தமிழரின் வாழ்வமைதியை அறிந்துகொள்ள இப் பாடல் உதவும், | s