பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. - பரிபாடல் மூலமும் ຂ-(ທຫu໖ புதுவெள்ளம் வருகின்றது! - நிறைகடல் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம் பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம் நிலமறைவதுபோல் மலிர்புனல் தலைத்தலைஇ மலைய இனங்கலங்க மலைய மயிலகவ - மலைமாசு கழியக் கதழும் அரவி யிழியும் 5 மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை - மாசில் பனுவற் புலவர் புகழ்புல. நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத் தாயிற்றே தண்ணம் புனல்; 10 கடல் நீர் நிறைந்தது. அதன் கண்ணுள்ள நீரை முகந்து கொண்ட மேகங்கள் வானிடம் எங்கணும் பரவின. தம்மிடத்தே நிறைந்து தளும்பும் நீரின் பாரத்தை அவை தாங்க மாட்டா வாயின. அச் சுமையைக் கழித்துத் தாம் களைப்பாற நினைத்தன போல, அவை பெருமழையைப் பொழிந்தன. நிலப்பகுதிகள் அனைத்தையும் மறைப்பதுபோல, மிக்க மழைநீர் இடங்கள்தோறும் பெருகி நிறைந்தது. மலையிடத் துள்ள உயிரினங்கள் கலக்கம் அடைந்தன. மலையின்கண்ணுள்ள மயில்கள் களிப்பால் அகவத் தொடங்கின. மலைப்பகுதிகளிற் படிந்திருந்த தூசுகள் நீங்கின. அருவிகள் விரைவோடு வீழ்ந்தன. இவ்வாறு வீழ்ந்த அருவி நீரானது, பல வழிகள் பொருந்திய மலையடிவாரப் பகுதிகளிற் பரவிச் சென்றது. குற்றமற்ற நூலறிவையுடையவர் புலவர்கள். புகழ்தரும் அறிவுரைகளைக் கூறுவன அவர் நா. அந் நாவினால் அவர்கள் நல்ல கவிதைகளைப் புனைவார்கள். அக் கவிதைகள் பொய்யாகிப் போவதில்லை. அவை எங்கணும் சென்று பொருந்திப் பரவும்: விரைந்து அதன் பயனான தொழில்களையும் பெருகச் செய்யும். - இவ்வாறே, குளிர்ந்த புனலானது எங்கணும் தாவிச் சென்று பரவிற்று எங்கனும் பொருந்திப் பரவிற்று. இதனால், உழவர்கள் விரைந்து தம் தொழில்களை மேற்கொள்வாரும் ஆயினர். சொற்பொருள் : நிறைகடல் - என்றும் வற்றாதே நீரால் நிறைந்திருக்கும் கடல். உராய் - பரவி. துளும்பும் - மேலெழுந்து விழும். அசைவிட - களைப்பாற. வானம் - மேகம். நிலம் - பூமி, நிலையுடைத்தாதலின் நிலம் ஆயிற்று. மலிர்புனல் - மிக்கநீர். இனம் - உயினம்; மானினமும் ஆம். மாசு அழுக்கு கதழும் அருவி - விரைவோடு வீழும் அருவிநீர். அதர்-வழி. தாழ்வரை மலையடி