பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பரிபாடல் மூலமும் உரையும் ஊரின்கண் ஒலி தோன்றல் தொடிதோள் செறிப்பத் தோள்வளை இயங்கக் கொடிசே ராத்திருக் கோவை காழ்கொளத் 15 தொகுகதிர் முத்துத் தொடைகலிழ்பு மழுக உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும் நகிலணி அளறும் நனிவண்டல் மண்ட இலையும் மயிரும் ஈர்ஞ்சாந்து நிழத்த * முலையும் மார்பும் முயங்கணி மயங்க - 20 விருப்பொன்று பட்டவர் உளநிறை உடைத்தென வரைச் சிறை உடைத்ததை வையை, வையைத் - திரைச்சிறைஉடைத்தன்று கரைச்சிறை அறைகெனும் உரைச்சிறைப் பறையெழ ஊரொலித் தன்று; - அணியணியாக மக்கள் வையையை நோக்கிச் செல்லு கின்றனர். அவர்கள் உள்ளத்தின் களிப்பினாலே அவர்கள் நடையிலும் மிடுக்குத் தோன்றுகின்றது. தோளில் அணிந்திருந்த தோள்வளைகள், தோள்கள் பூரித்தமையால் செறிவு கொண்ட வையாயின. அதனால், அவற்றை முன்னங்கைகளில் இறக்கிவிட, அவை அங்கே ஒன்றோடொன்று மோதி ஒலிசெய்த வண்ணமிருந்தன. மார்பினும் தோளினும் எழுதப்பெற்ற தொய்யிற் கொடிகளோடு சேர்ந்து, மார்பிற் கிடந்தசையும் அழகிய ஆரங்கள், தம்முட் கலந்து தழுவுதலால் மயங்கி உதிர்ந்தன. தொகுதிப்பட்ட கிரணங்களையுடைய முத்துச் சரங்கள், தம் தொடுப்பினின்றும் நீங்கியவையாய், சந்தன குங்குமக்குழம்புகளிலே படிந்து நிறம் மாறுபட்டன.நகங்களினும் கன்னங்களினும் ஊட்டப்பெற்ற செம்பஞ்சிக் குழம்பும், மார்பிடத்தே அழகுறத் தீட்டப்பெற்ற சந்தனக் குழம்பும் தம்முட் கலந்து கரைந்து, மிகுதியான வண்டல் போலப் படிந்து தோன்றின. தலைமாலையும், அவிழ்ந்து சோரும் கூந்தலும் குளிர்ந்த சந்தனச் சாந்தினை அழித்தன. மகளிர் முலைகளினும் ஆடவர் மார்பினும் அணிந்திருந்த அணிகள் தம்முட் பொருந்தி ஒன்றுடன் ஒன்று கலந்து மயங்கிக் கிடந்தன. விருப்பத்தால் ஒன்றுபட்டவரது உள்ளத்து நிறையாகிய காப்பினைப் பொங்கி யெழும் அவரது ஆர்வமானது உடைத்தாற்போல, கரையாகிய சிறையை உடைத்தபடி வையையும் பெருகி வந்தது. வையை வெள்ளத்தின் அலைகள் கரையாகிய தடையை உடைத்தன; மீளவும் கரையை அடைத்துத் தடையை ஏற்படுத்த அனைவரும் வருகவெனப் பறையறைக எனக் காவலர் கூவினர். அவர் குரலோடு கரை யடைக்க வம்மினென்று அறையப்பட்ட பறையினின்று எழுந்த ஒலியும் கலந்து, ஊரே ஒலியோடு விளங்கலாயிற்று. உாரவரும் ஒலியோடு ஆற்றை நோக்கி எழுந்து வரலாயினர். - -