பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - பரிபாடல் மூலமும் உரையும் பற்றி அவர்கள் மிகுதியும் பேசிக்கொண்டனர். குளிர்ந்த புதுப்புனலிலே திளைத்தாடுகின்றதான, தகைமிகுந்த அந்தப் போரினிடத்தே, தாம் தாம் மேற்கொள்ளும் களமாகக் குறித்த துறைகளை நோக்கி, ஆற்றலுடனே அவற்றைக் கைக்கொள்ள விரும்பியவராக முன்னேறிச் செல்வாராயினர். அணியணியாக, அவர்கள் முன்னணிப் படைகளைப் போலச் சென்றனர். அவர்கள் நீர்ப்போருக்கு வேண்டும் கருவிகளாகிய பலவற்றையும் கொண்டு சென்றனர். புனலாட்டத்திற்குச் செல்லத் தொடங்கும் அவர்கள், முதற்கண் தம் அணிகளைக் கழற்றிப் போடுவர். அதன் பின்னரே நீரிற் குதித்து ஆடுவர். யானைகளின் எருத்தின் மேலோராகச் சிலர் சென்றனர். மனச்செருக்குடைய குதிரைகளின் மேலோராகச் சிலர் சென்றனர். புழுகு நெய்யால் நிரப்பப்பெற்ற நீர்த்துருத்தியைச் சிலர் எடுத்துக்கொண்டு சென்றனர். மணநீர் நிரப்பிய கொம்புகளைச் சிலர் கொண்டுபோயினர். வெண்மையான கிடேச்சுக் கட்டையால் செய்யப்பெற்ற மிதவைகளைச் சிலர் கொண்டுசென்றனர். நன்றாகச் செய்யப்பெற்ற கிடேச்சுக் கட்டைத் தேரினைக் கொண்டுபோயினர் சிலர். இவ்வாறு கூட்டம் கூட்டமாக மக்கள் வையையை நோக்கிச் சென்றனர். யானை குதிரைத்திரள்களை அவற்றின் போக்குப்படி போகாமல் தடுத்து, ஒரே நேர்வழியூடேயே செல்லுமாறு செலுத்திச் செலுத்தி மக்கள் சென்றுகொண்டிருந்தனர். இதனால் வழியிடமெங்கணும் மக்கள் திரிந்தபடியிருந்தனர் என்னும் நிலைமையும் உண்டாயிற்று. - சொற்பொருள் : போர்அணி - போருக்குச் செல்லுவதற் குரிய ஒப்பனைகள். புகர்முகம் - களிறு, நீர் அணி நீராடலுக்குரிய அணிகள். இகல் மாறுபாடு; நீர் விளையாட லாகிய போர்: போட்டியும் வெற்றி தோல்விகளும் கொண்டதாகலின் 'நீர்விளையாட்டு இகல்' எனப்பெற்றது. நவின்று விரும்பி. தணிபுனல் - குளிர்ந்த புனல் மைந்து வலிமை. தாரர் - தார்ப் படையினர்; முன்னணிப் படையினர்; தாரணிந் தோரும் ஆம். கருவியர் - கருவிகளைக் கொண்டோர். கைம்மான் - யானை, கலி - மனச்செருக்கு கலிமடமா - குதிரை. சிவிறி நீர்த்துருத்தி நெய் புழுகுநெய்கோடு- கொம்பு கிடை கிடேச்சுக் கட்டை சாரிகை - குதிரைச் செலவு. உண்டிகை - யானை முதலிய கூட்டம் இயவு - வழி. திரீஇ திரிய - விளக்கம் : புதுப்புனல் விழவிற் கலந்தாடச் செல்வோர் அதற்கேற்ற அணிகள், கருவிகள் முதலியவற்றுடன், யானை களின் மீதும் குதிரைகளின் மீதும் அமர்ந்து செல்வாராயினர். அவர்கள், ஒருவருக்கு முற்பட்டு ஒருவர் செல்ல முயன்றும்,